நடுரோட்டில் வைத்து மது மயக்கத்தில் தள்ளாடிய காதல் ஜோடியை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரை காளிசெட்டி பாளையத்தை சேர்ந்தவர் பாலுசாமி (21) . இதே பகுதியை சேர்ந்தவர் வித்யா (18).
கோபிபகுதியில் உள்ள தனியார் நூல்மில்லில் வேலை செய்து வரும் இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மில்லுக்கு விடுமுறை விடப்பட்டது.
இதையடுத்து காதல் ஜோடி இருவரும் கோபி பச்சை மலை அடிவாரத்துக்கு சென்றுள்ளனர். அங்கு பாலுசாமி மதுஅருந்தியதாக கூறப்படுகிறது.
காதலன் மது அருந்தியதை கண்ட காதலிக்கும் மது மீது மோகம் ஏற்பட்டதால் அவரும் காதலுடன் சேர்ந்து மது அருந்தினார். இதற்கு முன் குடித்திராத அந்த இளம்பெண்ணுக்கு மதுபோதை மயக்கத்தை கொடுத்தது.
பின்னர் இருவரும் மது போதையில் தள்ளாடியபடி கோபி பேருந்து நிலையம் வந்தனர். போதை தலைக்கேறியதால் நடக்கமுடியாமல் வழியில் தடுமாறி அவர்கள் ஒருவரை ஒருவர் தாங்கி பிடித்துள்ளனர்.
ஆனால் போதையில் இருவரும் கீழே விழுந்ததால் இதனை சுற்றி இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதனைத் தொடாந்து கோபி பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல்நிலைய பொலிசார் காதல்ஜோடியை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர். அப்போது திடீரென காதலன் காதலியை தூக்கி கொண்டு ஓட்டம் பிடித்தான்.
போதையில் இருந்த அவன் இளம்பெண்ணை எங்கேயாவது தள்ளிவிட்டு விபரீதம் ஆகிவிடும் என கருதிய பொலிசார் அவனை விடவில்லை. பின்னர் இளம்பெண்ணை மீட்டனர்.
பொலிசார் முன்னிலையில் பொதுமக்கள் அந்த பெண்ணின் தலையில் தண்ணீர் ஊற்றினர். பின்னர் போதை குறைந்ததும் பெற்றோரை வரவழைத்து ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.