Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 19, 2016

மகிந்த ராஜபக்சவின் தங்கை புருசனான திருக்குமார் நடேசன்: தமிழரான இவர் செய்த திருகுதாளம் !



மல்வானையிலுள்ள பசில் ராஜபக்‌ஷவின் காணி எனத் தெரிவிக்கப்பட்ட காணி தொடர்பில் சாட்சியம் வழங்க திருக்குமார் நடேசன் நேற்று (17) பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரி. நடேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிருபமா ராஜபக்‌ஷவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.குறித்த காணி இதற்கு முன்னர் அவரது பெயரில் இருந்ததாக தெரிவிக்கப்படுவதோடு, அக்காணி பசில் ராஜபக்‌ஷவிற்கு சொந்தமானது எனவும் அதனை கொள்வனவு செய்து அரசாங்க பணத்தை மோசடி செய்து, சொகுசு வீடொன்றை கட்டி வருவதாக தெரிவித்து வழக்கு தொடரப்பட்டிருந்தது.

ஆயினும் குறித்த காணிக்கும் தனக்கும் எவ்விதத்திலும் தொடர்பு இல்லை என, கடந்த வாரம் பூகொட நீதிமன்றில் பசில் ராஜபக்‌ஷ தெரிவித்திருந்ததை அடுத்து அக்காணியை பகிரங்க ஏலத்தில் விற்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.