Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 13, 2016

பாரதீய ஜனதா தொண்டர் கொலை: கேரளாவில் இன்று முழு அடைப்பு



கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி அருகே உள்ளது பினராய் கிராமம்.இது கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனின் சொந்த ஊர் ஆகும்.
இந்த ஊரைச் சேர்ந்தவர் ரமீத் (வயது 29). பாரதீய ஜனதா தொண்டர். நேற்று காலை அந்த பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே வைத்து ரமீத்தை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடி யது.
ஆஸ்பத்திரியில் அனும திக்கப்பட்ட ரமீத், சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். கண்ணூரில் கடந்த சில நாட் களுக்கு முன்பு நடந்த கம்யூனிஸ்டு கட்சி தொண்டர் கொலைக்கு பழிக்குப் பழியாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.
ரமீத் படுகொலை பற்றிய தகவல் பரவியதும், அங்கு வன்முறை வெடித்தது. அந்த வழியாக சென்ற வாகனங்கள் மீது மர்மகும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தியது. சிலரின் வீடுகளை குறி வைத்து கற்கள் வீசப்பட்டது.
இந்த தகவல் கிடைத்ததும் போலீசார்குவிக்கப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்டவர் களை போலீசார் விரட்டி அடித்தனர். அங்கு அசம்பா விதம் நடைபெறாமல் இருக்க  போலீசார் குவிக்கப்பட்டுள் ளனர்.
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவும், பாரதீய ஜனதா தொண்டர் கொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த கொலை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
பாரதீய ஜனதா தொண்டர் ரமீத் கொலையை கண்டித்து இன்று பாரதீய ஜனதா சார்பில் கேரளா முழுவதும் முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று திருவனந்தபுரம், கொச்சி, எர்ணாகுளம், பாலக்காடு உள்பட மாநிலம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட் டிருந்தது. பஸ்கள், ஆட்டோக் கள் ஓடவில்லை. கண்ணூர் மாவட்டத்தில் முழு அளவில் நடந்த போராட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. மேலும் கொலையுண்ட ரமீத்தின் உடல் பிரேத பரிசோதனை நடைபெறும் கண்ணூர் அரசு ஆஸ்பத்திரியிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு ஏராளமான பாரதீய ஜனதா தொண்டர் கள் குவிந்துள்ளதால் பதட்ட மான சூழ்நிலை நிலவுகிறது.
குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு தினமும் 34 அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இன்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டத்தையட்டி, இந்த பஸ்கள் கேரளாவிற்கு செல்லவில்லை. குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளை வரை மட்டுமே இந்த பஸ்கள் இன்று இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.