தலைவர் கருணநிதிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், சில நாட்களுக்கு பார்வையாளர்கள் அவரை காண வருதை நிறுத்தி ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அக்கட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
திமுக தலைவர் கருணாநிதி ஒவ்வாமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார்.
வழக்கமாக எடுத்துக்கொள்ளும் மருந்துகளில் ஒன்றை எடுத்துக்கொள்ள தவறியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கருணாநிதி சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் சில நாட்களுக்கு பார்வையாளர்கள் அவரை காண வருவதை நிறுத்தி ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.