October 18, 2016
வைர நகையை திருடிய பெண் கைது!
சென்னையில் தொழிலதிபர் மனைவியிடம் 20 லட்ச ரூபாய் வைர நகையை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஜனார்தன ரெட்டி என்பவரின் மனைவி சைலஜா ரெட்டி, சென்னையில் உள்ள உறவினர் வீட்டின் திருமணத்திற்காக வந்திருந்தார்.
பின்னர் தியாகராய நகரில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்றில் துணி வாங்கிக் கொண்டிருந்தார் அப்போது அவரது கைப்பையில் இருந்த 20 லட்ச ரூபாய் மதிப்புடைய வைர நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து சைலஜா ரெட்டி அளித்த புகாரின் பேரில் தியாகராய நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது மைலாப்பூரை சேர்ந்த மேரி என்ற பழைய குற்றவாளி நகையை திருடியது தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து வைர நகையை கைப்பற்றினர்.
வைர நகையை திருடிய பெண் கைது!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 18, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 18, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.