October 10, 2016
மது போதையில் தள்ளாடியபடி நடந்து சென்ற இளம் காதல் ஜோடி
கோவையில் மது போதையில் இளம் காதல் ஜோடி தள்ளாடியபடி நடந்து சென்ற அவலம், காண்போரை முகம் சுளிக்க வைத்தது.
கோவை ரயில் நிலையம் அருகே நேற்றிரவு இளம் காதல் ஜோடி, மது போதையால் நடக்க முடியாமல் தள்ளாடியபடி சென்றது. ஆண், பெண் பேதமின்றி இருவரும், அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர்கள், வாகன ஓட்டிகள் ஆகியோரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டனர்.
மது மயக்கத்தில் இளம் பெண், சாலையோர சுவற்றில் மோதி, கீழே விழுந்து தள்ளாடிய காட்சிகள் காண்போரை முகம் சுளிக்க வைத்தது. மது போதையில் தள்ளாடிய பெண்ணை, அங்கிருந்த சிலர் தூக்க முற்பட்டபோது, அப்பெண்ணுடன் வந்த வாலிபர் தகராறில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துமாறு பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில், கோவையில் மது போதையில் காதல் ஜோடி தள்ளாடியது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மது போதையில் தள்ளாடியபடி நடந்து சென்ற இளம் காதல் ஜோடி
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 10, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 10, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.