Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 4, 2016

ஒரே வாரத்தில் உங்களை முதலமைச்சர் ஆக்குகிறேன் – அழகிரி சென்னை விஜயம்



திமுக தலைவர் கருணாநிதியின் மகன் அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும். சட்டமன்றத் தேர்தலில் தன்னால் ஆன அளவில் அவர் திமுகவை வீழ்த்த மதுரையில் பாடுபட்டார்.
அந்த தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தால், எப்படியும் ஸ்டாலின் முதலமைச்சர் ஆகிவிடுவார் என்பது அழகிரியின் மனக்கணக்காம். ஆனால் திமுக சொற்ப சதவீத வாக்குகளால் பின்னடைவை சந்தித்தது.
அழகிரியை அதிமுக இந்த முறை கண்டுகொள்ளாவிட்டாலும், நமக்குள் அடித்துக் கொள்வதால், யாருக்கும் லாபம் இல்லை என்பதை அழகிரி உணர்ந்து விட்டாராம்.
முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதுபற்றி எந்ததகவலும் இல்லாத நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி 20 என்ற மேஜிக் நம்பரை பெற்றுக் கொடுத்து, அப்பாவிடம் நல்ல பெயர் வாங்க அழகிரி முடிவெடுத்துள்ளதாக பேசப்படுகிறது.
இதற்கு அவர் வைத்திருக்கும் ஒரே நிபந்தனை ஸ்டாலினை எக்காரணம் கொண்டும் முதலமைச்சராக்க கூடாது என்பது தானாம். அதே நேரம் இந்த நிபந்தனைகளுக்கு ஸ்டாலின் தரப்பு கடும் ஆட்சேபம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அழகிரியை கருணாநிதி சந்திக்க கூடாது என ஸ்டாலின் தரப்பு நினைக்கிறதாம். இதனை உணர்ந்துள்ள கருணாநிதி, இதுவரை அழகிரியை சந்திக்க சம்மதிக்கவில்லையாம். இதனால் திமுக தரப்பில் சூடு பறக்கிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.