Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 14, 2016

திருட வந்தவன் மாப்பிள்ளை ஆனான்..!! இன்று கோடிகளுக்கு அதிபதி..!!



காக்கிநாடாவைச் சேர்ந்தவர் ராஜ்கோட்டி. மனைவி இல்லை ஒரே மகள். நிலம் புலம் வீடு வாசல் என்று பெரும் பணக்காரர் சொல்லிக் கொள்ள சொந்த பந்தம் என்று பெரிதாக யாரும் இல்லை. இருக்கும் சொந்தக்காரர்களும் வந்து கவனிப்பதில்லை.

மகளை முடிந்த அளவு படிக்க வைத்தார். படிப்பு ஏறவில்லை என்றதும் நிலம், மாடுகளை கவனித்து கொண்டு கூடவே இருக்க சொல்லி விட்டார்..! அன்று இரவு மழை. நடுஇரவு திருடுவதற்காக வந்தான் ஜாபர். உள்ளே நுழைந்தவனுக்கு அதிர்ச்சி ராஜ்கோட்டி நெஞ்சுவலியால் துடித்துக் கொண்டிருக்க மகளும் வேறு அறையில் தூங்கிக்கொண்டிருந்தார்.

திருட வந்த ஜாபருக்கு அதிர்ச்சி. ஓடிப்போய் லைட்டை தேடி பிடித்து அவருக்கு தண்ணீர் கொடுத்து நெஞ்சை தட்டிக் கொடுக்க ஆரம்பித்தான். யாரும் இல்லையா என்று கத்த சத்தம் கேட்டு மகள் ஓடிவந்தாள்.

அக்கம் பக்க்கத்தில் உள்ளவர்களை எழுப்பி கார் வரவைத்து ஆஸ்பத்திரிக்கு தூக்கிப் போனார்கள்.ஜாபரும் கூடவே சென்றான். அப்பாவை காப்பாற்றினார்கள்.

அதன் பின்தான் ஜாபர் யார் என்று கேட்டாள் மகள். அவன் உண்மையில் தான்திருடன் என்றும் அநாதை என்றும் கூற அப்பா மகள் இருவருக்குமே ஜாபரை பிடித்து விட்டது.அதன் பின் மூன்று நாட்கள் அந்த தகப்பனை ஜாபர் கவனித்துக் கொண்டான்.

மகள் சமைத்து எடுத்து வருவாள்.இரவு அப்பா கூடவே ஜாபரும் தங்கினான். அப்பா நலமாகி வீடு திரும்ப ஜாபர் விடை பெற்றான். ஆனால் அப்பாவோ மகளோ அவனை போகவேண்டாம் தங்களோடு இருந்து கொள்ளச் சொன்னார்கள்.

ஜாபரும் அந்த குடும்பத்தில் ஒருவராக மாறினான். பின்னர் ஜாபருக்கு தன் மகளை திருமணம்செய்து வைத்தார் தந்தை.  நேர்மையாக உழைத்து பல கோடிகளுக்கு அதிபதி ஆனான், அந்த திருட்டு மாப்பிள்ளை.

ஜாபரின் சொத்து மதிப்பு இன்று பல கோடிகள்.

விசுவாசம் அவனை உயர்த்தியது..!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.