October 6, 2016
உங்கள் வீட்டு பெண் பிள்ளைகள் பத்திரம்..! உங்கள் பக்கத்து வீட்டிலும் ரகு போன்று ஒரு அங்கிள் இருப்பான்
உங்கள் வீட்டு பெண் பிள்ளைகள் பத்திரம். உங்கள் பக்கத்து வீட்டிலும் ரகு போன்று ஒரு அங்கிள் இருப்பான்..!
அந்த குடும்பத்தில் கணவன் மனைவி இருவருமே வேலைக்குப் போவார்கள். பத்தாவது படிக்கும் ஒரு மகன், ஒன்பதாவது படிக்கும் ஒரு சிறுமி.
சனிகிழமை அந்த குழந்தைகளுக்கு விடுமுறை போரடிக்கும் போது மாடியில் இருக்கும் ரகு அங்கிள் வீட்டுக்கு போய் வீடியோ கேம் ஆடுவார்கள்.
சில நேரங்களில் பையன் கிரிக்கெட் விளையாடப் போய்விடுவான். அந்த நேரத்தில் சிறுமி மட்டுமே அந்த வீட்டில் இருப்பாள். ரகுவின் மனைவி அடிக்கடி தனது அம்மா வீட்டிற்கு போய்விட ரகுவும் கீழ் வீட்டு சிறுமி மட்டுமே கேம் விளையாடுவார்கள்.
ரகு என்கிற மிருகம் அங்கும் இங்குமாக தொட்டு விளையாட அந்த சிறுமிக்கு அதன் பயங்கர அர்த்தம் தெரியவில்லை. இவனும் விளையாடும் சாக்கில் கொஞ்சம் கொஞ்சமாக அத்து மீறி இருக்கிறான்.
அன்று இரவு அந்த சிறுமி வலியால் துடிக்க அம்மா என்னவோ எதோ என்று பயந்து போய் ஆஸ்பத்திரிக்கு அழைத்து போக, டாக்டர் என்ன பிராப்ளம் என்று அறிந்து அதிர்ந்து போனார்.
விஷயம் தெரிந்த அந்த சிறுமியின் அம்மா ஆடிப்போனார். இந்த விஷயம் கணவனுக்கு தெரிந்தால் வெட்டி கொன்று போடுவானே என்று பயந்து,அரண்டு போய் இருக்க டாக்டர் தைரியம் சொல்லி கணவனை வரவைத்து பக்குவமாக எடுத்துச் சொல்ல அவனுக்கு மயக்கமே வந்து விட்டது..
இரண்டு நாட்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி விட்டது அந்த குடும்பம். பின் யாரிடமும் சொல்லாமல் வீட்டை காலி செய்து விட்டு வேறு வீடு பார்த்துப் போய் விட்டார்கள்.
இது குறித்து கூறும் டாக்டர் சிவகுமார். அவசியம் இருந்தால் தவிர கணவன் மனைவி இருவரும் வேலைக்கு போவதை தவிர்க்க வேண்டும்.குழந்தைகள் மேல் அதிக அக்கறை செலுத்துங்கள்.
இல்லையேல் இப்படி ஒரு மிருகம் உங்கள் அருகில் உள்ள வீட்டில் கூட இருக்கலாம் என்கிறார். பகீர் என்கிறது..
உங்கள் வீட்டு பெண் பிள்ளைகள் பத்திரம்..! உங்கள் பக்கத்து வீட்டிலும் ரகு போன்று ஒரு அங்கிள் இருப்பான்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 06, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 06, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.