Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 30, 2016

பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து!



சேலம் செவ்வாய்பேட்டை அருகே பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் குடோனில் நள்ளிரவில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.
சேலம் அழகாபுரத்தை சேர்ந்த புகழேந்தி என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் குடோன், சேலம் மாநகரம் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ளது. இந்நிலையில்,  இந்த குடோனில் நேற்றிரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து மளமளவென பரவிய தீ அந்த குடோன் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் தீ கட்டுக்கடங்காமல் குடோன் முழுவதும் பரவி எரிந்ததால், சேலம் ஓமலூர், வாழப்பாடி, இரும்பாலை ஆகிய பகுதிகளில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 50 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின. தீ விபத்தின் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொது மக்கள் விடிய விடிய மின்சாரம் இன்றி கடும் அவதிக்கு உள்ளாகினர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.