October 17, 2016
நடுரோட்டில் ஆட்டோ டிரைவரை வெட்டிக் கொன்ற மர்ம கும்பல்: ஆதம்பாக்கத்தில் பரபரப்பு
ஆதம்பாக்கத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர் நடு ரோட்டில் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கிண்டி மசூதி காலனியைச் சேர்ந்த அசார் (30) என்பவர் ஆதம்பாக்கம் ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்தார். இந்நிலையில் அசார் நேற்று இரவு ஆட்டோ நிறுத்தத்தில் இருந்து எதிரில் உள்ள கடைக்கு சென்றபோது, 3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென அசாரை தாக்க தொடங்கியது. இதனால் பதறி அடித்து ஓடிய அவரை அந்த கும்பல் ஓடஓட விரட்டி நடுரோட்டில் வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அசாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்
நடுரோட்டில் ஆட்டோ டிரைவரை வெட்டிக் கொன்ற மர்ம கும்பல்: ஆதம்பாக்கத்தில் பரபரப்பு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 17, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 17, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.