Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 20, 2016

இளம்பெண்களை திருமணம் செய்வதாகக்கூறி பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் மதபோதகர் கைது!



இளம்பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் மத போதகரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த கோசுவா இமானுவேல் ராஜ் என்பவர், மத போதகராக தாழையூத்து பகுதியில் பணியாற்றி வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த உஷா என்ற பெண்ணிடம் 10 சவரன் நகையை ஏமாற்றி பெற்று கொண்டதாகவும், அவரை திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது.
இந்நிலையில் பாப்பன்குளம் பகுதியை சார்ந்த சீமாகுமாரி மற்றும், கொடியன் குளத்தை சேர்ந்த அனுஷ்யாவிடமும் நகைகளை பெற்று மதபோதகர் ஏமாற்றியதாக கூறி, பாதிக்கப்பட்ட மூன்று பெண்களும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து மத போதகரை கைது செய்து, தாழையூத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.