Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 19, 2016

இந்த ஒரு கப் காபி ஆண்களின் விறைப்புத்தன்மை பிரச்சனையைப் போக்குமாம்!



காபி பலருக்கும் விருப்பமான ஓர் பானம் தான். அத்தகைய காபியை அதிகம் குடித்தால், விறைப்புத்தன்மை பிரச்சனை வரும் என சில ஆய்வுகள் கூறினாலும், சமீபத்தில் தயாரிக்கப்பட்ட ஓர் புதிய மூலிகை காபி விறைப்பு பிரச்சனையைப் போக்கி, நீண்ட நேரம் உறவில் சிறப்பாக செயல்பட உதவுவதாக தெரிய வந்துள்ளது.
ஒரு கப் காபி காதல் வாழ்க்கையை சிறப்பாக்கும் என்று கூறினால் எவ்வளவு ஆனந்தமாக உள்ளது. இங்கு அந்த புதிய காபி குறித்து தமிழ் போல்ட் ஸ்கை சில விஷயங்களை உங்களுக்கு கொடுத்துள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.
ஸ்டிஃப் புல் என்னும் பெயரில் விற்கப்படும் இந்த காபியில், மூலிகைகள் சேர்க்கப்பட்டுள்ளது.
அதுவும் டாங்கட் அலி, மக்கா வேர், குவரானா போன்ற மூலிகைகள் உள்ளது.


இந்த காபியை ஒரு டம்ளர் குடித்தால், மூன்று நாட்கள் ஆண்கள் சற்றும் சோர்ந்து போகாமல் உறவில் நன்கு செயல்படுவார்களாம். ஒரே காபியில் மூன்று நாட்கள் என்பது உடலுக்கு சற்று ஆபத்தானது தான்.

இந்த காபியைத் தயாரித்தவர்கள், இந்த மேஜிக் காபி உடலின் ஆற்றலை மேம்படுத்தும் மற்றும் உடலின் சோர்வை குறைக்கும் என கூறுகிறார்கள்.

இதுக்குறித்து உடல்நல நிபுணர்கள், இம்மாதிரியான காபி மிகவும் அபாயகரமானது என்றும், செல் அழிவை உண்டாக்கி, விரைவில் ஆண்மை குறைவை உண்டாக்கும் என கூறுகிறார்கள்.

சுயமாக காபி தயாரித்து வெளியிட்ட இம்மாதிரியான காபி தயாரிப்பாளர்கள், இந்த காபியில் வயாகரா போன்று செயல்படும் டெஸ்மெத்தில் கார்போடெனாஃபில் என்னும் பொருளை சேர்த்துள்ளது. ஆனால் இதை இந்த காபி பாக்கெட்டின் பின்புறத்தில் குறிப்பிடவில்லை. எனவே இது ஆபத்தான ஓர் பொருள் தான் என FDA கூறுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.