October 11, 2016
ஆயுதங்களை வைத்து வழிபாடு செய்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மீது புகார்!
இந்துக்கள் வெகு விமர்சியாக கொண்டாடும் ஆயுத பூஜையில் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் துப்பாக்கி, அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை வைத்து வழிப்பட்ட புகைப்படம் ஒன்று அவரது சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டதால் சர்ச்சை கிளம்பியுள்ளது.
ஆயூத பூஜையான இன்று அனைத்து இந்துக்களும் அவர்கள் தொழிலுக்கு முக்கிய ஆயுதமாக பயன்ன்படும் கருவிகளை வைத்து வழிபாடு செய்வது வழக்கம்.
இந்துக்கள் அல்லாத பிற மத தொழிலாளர்கள் கூட ஆயுத பூஜையான இன்று அவர்களுடைய தொழிலுக்கு பயன்படும் கருவிகளை வைத்து வழிபாடு செய்வார்கள்.
ஆனால் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவரான அர்ஜூன் சம்பத், இன்று கத்தி, அரிவாள், துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வைத்து வழிபாடு செய்வது போன்ற புகைப்படம் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
மேலும் இது குறித்து இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர், தடா.ஜெ. அப்துல் ரஹீம் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் அர்ஜூன் சம்பத் வழிபாட்டின் போது பயன்படுத்திய துப்பாக்கி அரசு அனுமதி பெற்றதா என்று அவரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற ஆயுதங்களை வைத்து வழிபட இந்திய சட்டத்தில் அனுமதி உள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டத்திற்கு புறம்பாக ஆயுதங்களை வைத்து வழிபட்ட அர்ஜூன் சம்பத் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆயுதங்களை வைத்து வழிபாடு செய்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மீது புகார்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 11, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 11, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.