Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 9, 2016

உங்களை எல்லாம் அடித்து உதைத்துவிடுவேன்: மத்திய மந்திரியின் ஆதங்க பேச்சு



மத்திய மந்திரி பங்கஜா முண்டே அரசியல் பொது கூட்டம் நடத்துவதற்காக கோவில் பூசாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டியதாக ஓடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தசரா திருவிழா வரவிருப்பதால் அகமத்நகர் மாவட்டம் பகவன்காட் பகுதியில் அரசியல் பொது கூட்டம் நடத்துவதற்காக மராட்டிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரியான பங்கஜா முண்டே முடிவு செய்துள்ளார்.
ஆனால் அப்பகுதியின் அருகே கோவில் இருப்பதால் கோவில் நிர்வாகமும், பூசாரியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது பங்கஜா முண்டேவுக்கு தெரிய வர, அவர் உடனே கோவில் பூசாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளார்.
அதில் கிராமப்புறங்களில் சிறு தொழில்களுக்கான 25-15 திட்டத்துக்கான நிதி மூலம் என்னால் யாரை வேண்டுமானாலும் விலைக்கு வாங்க முடியும்.
வருகிற 11 ஆம் திகதி வரை எவ்வித சண்டை, சச்சரவிலும் ஈடுபட வேண்டாம் என்றும் என்னுடைய ஆதரவாளர்களிடம் தான் சொல்லி இருப்பதாகவும் என்னால், பொதுமக்களை பணம் கொடுத்து வாங்க முடியும் என கூறியுள்ளார்.
ஆனால், அதை தான் செய்ய மாட்டேன், கடந்த காலங்களில் உங்களுக்கு நான் கொடுத்ததை எல்லாம், நிபந்தனைகளுடன் தான் கொடுத்தாகவும், இப்போது உங்களுக்கு நான் பணம் தர மாட்டேன் என்றும் தசராவை பகவன்காட் பகுதியில் கொண்டாட விரும்புகிறோம், அதனால் அது முடியும் வரை எந்தவொரு தவறிலும் ஈடுபட கூடாது என முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் நாங்கள் ஒன்றும் சிறுமைப்பட்டவர்கள் அல்ல. எங்கள் தொண்டர்களால் பார்லியில் உள்ள உங்களது ஆதரவாளர்களை அடித்து உதைக்க முடியும். அவர்கள் மீது என்னால் போலீசில் பொய் புகார் அளிக்க முடியும் எனவும் கூறியுள்ளார். தற்போது இந்த ஓடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.