Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 20, 2016

சென்னையில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த டூவிலர் (அதிர்ச்சி வீடியோ)


சென்னை மெரினாவில் நடுரோட்டில் டூவிலர் தீப்பிடித்து எரிந்தது. இதில் டூவிலரில் வந்த 3 பேர் காயங்களுடன் தப்பினர்.

சென்னை மெரினா கடற்கரையையொட்டி உள்ள காமராஜர் சாலையில் இன்று காலையில் ஒரு பைக் சென்றது. அந்த பைக்கில் கணவன், மனைவி, குழந்தை என மூன்று பேர் பயணித்தனர். திடீரென சாலையின் குறுக்கே ஒரு நாய் வந்துள்ளது. இதனால் நிலைதடுமாறிய அந்த குடும்பத்தினர் நடுரோட்டில் கீழே விழுந்தனர். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது.









இந்த சூழ்நிலையில், சாலையை உரசி சென்றதில் டூவிலர் திடீரென தீப்பிடித்தது. இதனால் அந்த குடும்பத்தினர் அங்கிருந்து ஓடினர். இதை அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர். பிறகு தீயணைப்பு  நிலையத்துக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். என்றாலும் டூவிலர் எலும்புக் கூடானது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டசவமாக அந்த குடும்பம் தப்பியது. இது குறித்து அண்ணாசதுக்கம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.