Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 15, 2016

ஜியோவிற்கு போட்டியாக ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்


முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஆரம்பிக்கப்பட்ட, ஒரு மாதத்திற்குள்ளாக 16 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இதனால் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், கேபிள் வழியான பிராட்பேண்ட் இணைய சேவையில், அழைப்புக்கட்டணம், மற்றும் டேட்டா கட்டணத்தை அதிரடியாக குறைத்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதிவேக வயர்லெஸ் இணைய சேவையில் அளவில்லா டேட்டாக்கள் மற்றும் அழைப்புகளை இலவசமாக வழங்கி வருகிறது. இந்த சேவை வரும் டிசம்பரில் முடிவடையவுள்ள நிலையில் காலக்கெடு நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போட்டி நிறுவனமான ஏர்டெல், புதிய வாடிக்கையாளர்களை கவரும் விதமாக, 3 மாதங்களுக்கு அளவில்லா டேட்டாக்களை(unlimited data) இலவசமாக வழங்குகிறது.

போட்டி நிறைந்த தொலைத்தொடர்பு சேவையில், தொழில்நுட்பங்களை அதிகரித்து இணைய வேகத்தை அதிகரிப்பதன் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைக்க முடியும் என்று ஏர்டெல் நிறுவனம் நம்புகிறது. இதற்காக 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், vectorisation என்ற தொழில்நுட்பம் மூலம் பிராண்ட்பேட் வேகத்தை 100 எம்பிபிஎஸ் வரை அதிகரிக்கும் (உள்கட்டமைப்பில் மாற்றம் செய்யாமல்) திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதற்காக வாடிக்கையாளர்களின் வீடுகளில் 1000 ரூபாயில் (ஒரு முறை முதலீடு) மோடத்தை மாற்றித்தருகிறது. இந்த தொழில்நுட்பம் மூலம் 5 லட்சம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் ஸ்மார்ட் டிவிகளை அதிக மக்கள் வாங்க ஆரம்பித்துவிட்டதால், டேட்டாக்கள் பயன்பாடு அதிகரித்துவிட்டது. அதிக இண்டர்நெட் வேகம் கொண்ட வை-பை டிவைஸ்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். அதற்கு அதிக கட்டணம் செலவழிக்கும் நிலை உள்ளது. எனவே அதற்கு மாற்றாக ஏர்டெல் நிறுவனம் பைபர் கேபிள் மூலம் இண்டர்நெட் வேகத்தை அதிகரித்து, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதே நேரத்தில், ஐடியா உள்பட மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வயர்லஸ் இண்டர்நெட் சேவையில் அதிக கவனத்தை செலுத்துகின்றன.

போட்டிகள் அதிகரித்துள்ளதையடுத்து, ஏர்டெல் நிறுவனம் மை ஹோம் பிளான் படி பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு (போஸ்ட் பேய்ட் மற்றும் டிடிஹெச் வாடிக்கையாளர்களும்) ஐந்து ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா வழங்குவது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.