Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 5, 2016

பெங்களூருவில் 7 மாடிக் கட்டிடம் சரிந்துவிழுந்து விபத்து!


பெங்களூருவில் உள்ள எச்.எஸ்.ஆர். லேஅவுட் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில், புதிதாகக் கட்டப்பட்டு வந்த 7 அடுக்கு மாடிக் கட்டடம், இன்று திடீரென சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

இந்த விபத்தில் சுமார் 20 கட்டுமான தொழிலாளர்கள் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து விரைந்து வந்த மீட்புப் படையினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்தக் கட்டட விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த பெங்களூரு போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.