Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 15, 2016

நம்புங்க... ஆட்டோதான் இந்த வி.ஐ.பி-யோட அஃபிஷியல் வாகனம்!


சமீபத்தில் ஒரு படத்தில் விஜய் சேதுபதி சொல்லுவார்: ‘நான் ஒண்ணு சொல்றேன்... கொஞ்சம் பழசுதான்’னு. அந்த மாதிரி சில மாசங்களுக்கு முன்னால வந்த நியூஸ்தான். ஆனா நாம மிஸ் பண்ணக்கூடாத ஒண்ணு!

‘உஸ்ஸ்.. ஒரே வெயிலா இருக்குப்பா.. சீக்கிரம் ஒரு ஏ.சி. கார் வாங்கணும்’ என்று நம்மில் சிலர் சொல்லிக் கொண்டிருக்க ‘எனக்கு ஆட்டோதான் வேணும்’ என்றிருக்கிறார் ஒருவர். அதுனால என்னப்பா என்றால்.. சொன்னவர் அம்பாசிடர் என்பதுதான் விஷயமே!

என்னது... அம்பாசிடர்க்கு ஆட்டோவா என்று குழம்ப வேண்டாம்.

மெக்ஸிகன் தூதுவராக இருப்பவர் மெல்பா ப்ரியா. (Melba Pria). அவர்தான் ஆட்டோவை தனது அஃபீஷியல் வாகனமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.



‘நான் தூதுவராக ஆவதற்கு முன்னரே இந்தியாவில் ஆட்டோ ரிக்‌ஷாவில் பயணித்திருக்கிறேன். எப்பொழுதுமே ஆட்டோதான் எனக்குப் பிடித்த வாகனம். கோடிக்கணக்கானவர்கள் பயணிக்கும்போது ஒரு நாட்டின் தூதுவரான நான் பயன்படுத்தினால் என்ன தோன்றியது’ என்கிறார் மெல்பா.

ஆனால், தூதரகத்துக்காக ஆட்டோ வாங்குவது அத்தனை எளிதானதாக இருக்கவில்லை. ஆட்டோக்கள் வணிகரீதியாகப் பயன்படுத்தப்படுபவை. ஆகவே ‘இதை வணிக ரீதியாக உபயோகிக்க மாட்டோம்’ என்று வெளியுறவுத்துறையிடம் அனுமதி வாங்க வேண்டி வந்தது.

வாங்கினார். மெக்ஸிகோவின் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் இந்தியா வந்தபோது அவரை வைத்து வண்ண மயமாக்கினார். தூதரகத்தின் ஓட்டுநருக்குத்தான் இது வியப்பாக இருந்தது. ஏ.சி.காருக்கு பதில் ஆட்டோ ரிக்‌ஷா! மூன்று நாட்களில் ஆட்டோ ஓட்டக் கற்றுக் கொண்டு வந்தவரை ஒரு மாதிரிப் பார்த்தார்களாம் எல்லாரும். காரணம் அஃபீஷியலாக டை எல்லாம் கட்டிக் கொண்டு ஓர் ஆட்டோ டிரைவர்.



’ஆரம்பத்தில் ஒரு மாதிரிதான் இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு பழகிவிட்டது’ என்கிறார் ஓட்டுநர் ஜக்தீஷ்.

வேறு சில சிக்கல்களும் இருந்தது இவர்களுக்கு. பார்லிமெண்ட், நட்சத்திர விடுதிகளில் எல்லாம் ஆட்டோக்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

”ஆட்டோவுக்கு அனுமதி இல்லைதான். ஆனால் உள்ளே அம்பாசிடர், நான் இருக்கிறேனே. அதனால் பின்பக்க கேட் வழியாக எங்கெங்கோ சென்று பார்க் செய்ய வேண்டிவந்தது. ஸ்டார் ஹோட்டல்களிலும் கூட அனுமதி இல்லை.. என்ன செய்வது? ஆனால் எனக்கு இதுதான் பிடித்திருக்கிறது என்கிறார் மெல்பா.



ஓட்டுநருக்கும் இப்போதெல்லாம் மகிழ்ச்சிதானாம். ‘ஓ... அம்பாசிடரோட ஆட்டோ டிரைவர்ல?” என்று எங்கு சென்றாலும் அடையாளம் கண்டுகொள்கிறார்களாம். ‘இது சுற்றுச்சூழலுக்கும் மிக ஏற்ற வாகனம். இவங்களே இதைப் பயன்படுத்தறாங்க.. இதே மாதிரியே பெரிய மனுஷங்க சிலரும் உபயோகிச்சா நல்லாருக்கும்” என்கிறார் ஜக்தீஷ்.

கரெக்ட்தானா? உங்க கருத்து என்ன பாஸ்?

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.