அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசத் துடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறை பாடு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, கடந்த மாதம் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டார். அவருக்கு டாக்டர்கள் குழுவினர் அளித்த தீவிர சிகிச்சையால் காய்ச்சல் குணமானது. அவர் வழக்கமான உணவு களை சாப்பிடுவதாகவும், ஓரிரு நாட்கள் மருத்துவ மனையில் ஓய்வு எடுப்பார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இதற்கிடையே, முதல் வருக்கு ஏற்பட்ட நோய் தொற்றுக்கும் டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே கடந்த 30-ம் தேதி அப்போலோ மருத்துவமனைக்கு வந்து முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
இதைத் தொடர்ந்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் நேற்று முன்தினம் வெளியிட்ட செய்தியில், ‘முதல்வருக்கு ஏற்பட்டுள்ள நோய் தொற்றை சரிசெய்வதற்கான மருந் துகள் மற்றும் செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என தெரிவிக்கப்பட்டி ருந்தது.
இந்நிலையில், அப்போலோ மருத்து வமனை தலைமை இயக்க அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘முதல் வரின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இதுவரை அளிக்கப்பட்டு வந்த சிகிச்சைகள், முதல்வருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வரின் உடல் நலத்தை டாக்டர்கள் குழு வினர் தீவிரமாக கண் காணித்து வருகின்றனர். மேலும் சில நாட்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற அறிவுறுத் தப்பட்டுள்ளது’ என்று தெரி வித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.