Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 3, 2016

ஆப்பிள் ஐபோன் கடைக்குள் நுழைந்து கைபேசிகளை நொறுக்கிய பிரெஞ்சு நபர்


ஐரோப்பிய வாடிக்கையாளர்களின் உரிமைகளை மீறுவதாகக் கூறி, ஃப்ரெஞ்சு நபர் ஒருவர் பாரீஸில் டிஜோன் நகரத்தில் இருந்த ஐபோன் கடைக்குள் நுழைந்து தன்னிடமிருந்த இரும்புப் பந்தால் கோபத்துடன் புது ஐபோன்களை அடித்து நொறுக்கியுள்ளார்.

இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவில், கருப்புக் கண்ணாடியை அணிந்த மனிதர் ஒருவர் ஃப்ரெஞ்சு விளையாட்டில் பயன்படுத்தப்படும் இரும்புப் பந்தோடு, டிஜோன் நகரில் இருந்த ஆப்பிள் மொபைல் கடைக்குள் நுழைந்தார். அங்கே காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த ஐபோன்களை எடுத்து மேசை மீது வைத்தவர், கையில் இருந்த பந்தால் மொபைலை அடித்து டிஸ்ப்ளேவை அழிக்க ஆரம்பித்தார். இதேபோல அங்கிருந்த மற்ற ஐபோன்களின் டிஸ்ப்ளேக்களையும் அவர் உடைத்தார்.

இந்த வீடியோவை கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் வீடியோவாக எடுக்க ஆரம்பித்தார். வீடியோ எடுப்பதைத் தெரிந்துகொண்ட மனிதர், கேமராவுக்கு முன்னால் நின்று ஐபோன்களை அழிப்பதற்கான காரணத்தைக் கூற ஆரம்பித்தார்.

''ஆப்பிள் நிறுவனம், ஐரோப்பிய வாடிக்கையாளர்களின் உரிமைகளை மீறுகிறது. அவர்களிடம் என்னுடைய பணத்தைத் திருப்பித் தாருங்கள் என்று கேட்டேன். ஆனால் அதற்கு அவர்கள் மறுத்துவிட்டார்கள். இப்போது இதுதான் அவர்களுக்கான என்னுடைய பதில்!'' என்று கத்திக்கொண்டே தன்னுடைய இரும்புப் பந்தைக் கொண்டு மற்றொரு ஐபோனையும் உடைத்துவிட்டார்.

காவலர் வந்து அவரைத் தடுப்பதற்குள் கடையில் இருந்த 12 ஐபோன்களையும், 1 மேக்புக்கையும் அவர் அடித்து நொறுக்கியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.