நெல்லை: சசிகலா புஷ்பாவுக்கு எதிராக புகார் அளித்த பெண்களின் வழக்கறிஞர் வீடு மற்றும் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர்கள் இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு எதிரே நிமிர்ந்து கூட நிற்க முடியாது என்பது தான் நிலை. ஆனால் ஜெயலலிதா என்னை அறைந்தார் எனச்சொல்லி பரபரப்பை கிளப்பியவர் சசிகலா புஷ்பா. தற்போது ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரை சிலர் தங்களின் கட்டுப்பட்டில் வைத்து இருப்பதாகவும், முதல்வரின் பெயரில் வரக்கூடிய அறிக்கைகள் மற்றும் அறிவிப்புகளில் உள்ள அவரது கையெழுத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பேசி பரபரப்பை கிளப்பி வருகிறார்.

சசிகலா புஷ்பா ஜெயலலிதாவுக்கு எதிராக பேசத்துவங்கியதையடுத்து, சசிகலா புஷ்பாவின் வீட்டில் வேலை செய்த பானுமதி, ஜான்சிராணி ஆகிய இரு பெண்கள் சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர், மகன் மீது பாலியல் புகாரினை தெரிவித்திருந்தனர். தங்களை கடுமையாக தாக்கியதாகவும் அவர்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்ய... வழக்கு விசாரணை மதுரை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக திசையன்விளையைச் சேர்ந்த சுகந்தி ஜேனட் என்ற வழக்கறிஞர் ஆஜராகி வாதாடி வருகிறார். விடுமுறை காரணமாக இவர் தனது குடும்பத்தினருடன் கொச்சினுக்கு சென்றார். இந்த நிலையில், நேற்று இரவு இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கும்பல் வீட்டில் இருந்த நகைகளை கொள்ளயடித்ததுடன், வீட்டில் இருந்த டி.வி, ஃபிரிட்ஜ், கம்ப்யூட்டர் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் அடித்து உடைத்து சூறையாடினர். வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரையும் அடித்து நொறுக்கினர்.

இது பற்றிய தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த சுகந்தி ஜேனட், இந்த சம்பவம் பற்றி திசையன்விளை காவல்நிலையத்தில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீஸார், விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அவரது வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சசிகலா புஷ்பா மீதான வழக்கில் அவருக்கு எதிராக ஆஜராகும் வழக்கறிஞரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
வழக்கறிஞர் சுகந்தி ஜேனட்டிடம் பேசினோம். "நான் சசிகலா புஷ்பாவின் வழக்கில் ஆஜராவது சிலருக்கு பிடிக்கவில்லை. அவர்கள் என்னை இந்த வழக்கில் இருந்து விலகுமாறு தொடர்ந்து நெருக்கடி கொடுத்தார்கள். ஹரி நாடார், ராக்கெட் ராஜா போன்றவர்கள் சசிகலா புஷ்பாவுக்கு பின்னணியில் இருக்கிறார்கள். என்னை செல்போனில் தொடர்பு கொண்டு பலமுறை மிரட்டியும் நான் இந்த வழக்கில் இருந்து விலக மறுத்ததால் என்னை அச்சுறுத்துவதற்காக என் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். ஆனால், நான் இதற்கெல்லாம் பயந்து ஓடி ஒளியப்போவது இல்லை’’ என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.