சென்னை அப்போலோ மருத்துவமனையில்,முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைப் பெற்றுவரும் தளத்துக்கு அருகேயே அதிமுக பிரமுகர் ஒருவர் சிகிச்சைக்காக அட்மிட் ஆகி மூத்த அதிமுக அமைச்சர்கள் மத்தியில் பீதியை உருவாக்கியிருப்பதாக அதிமுகவினர் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
கடந்த மாதம் 22-ம் தேதி இரவு முதல், தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோவில் உடல்நலம் குன்றிய நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இன்றோடு 24 நாட்கள் ஆகிய நிலையில்,முதல்வரின் உடல்நிலையில் சிறிது சிறிதாக முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்று செய்திகள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் அதே அப்போலோ மருத்துவமனையில்,கடந்த வாரம் சென்னையைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவர் லோ-பிரஷர் என்று அட்மிட் ஆகியுள்ளார். இதுதான் ஓபிஎஸ்,எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக மூத்த அமைச்சர்கள் மத்தியில் பெரும் 'பிரஷரை' ஏற்றியுள்ளது என்கிறார்கள் அதிமுகவினர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அதிமுகவின் தலைமைக்கழக மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில்," அதிமுகவின் தென்சென்னை வடக்கு மாவட்டத்தில், எம்.ஜி.ஆர்.இளைஞரணி மாவட்டச் செயலாளராக இருப்பவர் தேவா. அண்மையில் வெளியான சென்னை மாநகராட்சிக்கு, அதிமுக சார்பில் போட்டியிடும் கவுன்சிலர்கள் பட்டியலிலும் இவரின் பெயர் இடம்பெற்றுள்ளது.இவரின் அரசியல் பிரவேசம் சற்று வித்தியாசமானது. ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் என்றாலும் சசிகலாவின் நெருங்கிய உறவினர் என்று கூறிக்கொள்ளும் இவர்,தன்னைப் புதிய அதிகாரமயமாகக் காட்டிக்கொள்கிறார். முன்னாள் திமுக அமைச்சரின் பினாமி என்று தகவல் இருந்ததால்,கடந்த 2011 உள்ளாட்சித் தேர்தலிலேயே போட்டியிட வாய்ப்பு தலைமையால் மறுக்கப்பட்டது. அப்போது இவரைப்பற்றிய உளவுத்துறை நோட் நெகட்டிவாக இருந்த காரணத்தால் முதல்வர் இவருக்கு சீட் தரவில்லை.இவர் மூலமாகத்தான் திமுகவுக்குத் தகவல் போகிறது என்கிறார்கள்.
மேலும், வரிச்சியூர் பகுதி தாதா ஒருவரின் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் இப்போது ஒரே மாதத்தில் கட்சியில் மாவட்ட பொறுப்பும்,கவுன்சிலர் சீட்டும் வாங்கி சீனியர்களுக்கே மிரட்சியைக் கொடுத்துள்ளார். அவரின் அடுத்த இலக்கு மாவட்டச் செயலாளர்,சென்னை மேயர் பதவிகள்தான் என்றும் நெருங்கியவர்கள் மத்தியில் கூறிவருகிறார் என உறுதியான தகவலும் இருக்கிறது.
இந்த நிலையில், கடந்த வாரம் அப்போலோவில் லோ-பிரஷர் இருப்பதாகக் கூறி அட்மிட் ஆகியுள்ளார். இது பொய் காரணம் என்று கூறப்படுகிறது. உண்மையில் அவருக்கு ஒன்றும் இல்லை. முதல்வரின் அறையில் என்ன நடக்கிறது என்பதை முழுமையாகத் தெரிந்துகொள்ளவே தேவா அங்கு அட்மிட் ஆனதாக அவருக்கு நெருங்கியவர்களே கிசுகிசுக்கிறார்கள். அமைச்சர்களே முக்கியமாக ஓபிஎஸ்,எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பிரதான நிர்வாகிகளே அப்போலோவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தளத்துக்குச் செல்வதற்கு தயக்கம் காட்டுகிறார்கள். ஆனால் இவர் மிக எளிதாக அங்கெல்லாம் சென்று வருகிறார். அதனால் மூத்த அமைச்சர்கள் இவரைக்கண்டாலே நெளிகிறார்கள்.
தேவாவின் இந்தத் திடீர் செல்வாக்குக்கு பின்னணியாகப் பலத்த காரணமும் இருக்கிறது. திவாகரன் மகன் ஜெய் ஆனந்த், இவரின் பின்னணியில் இருக்கிறார்.அவர்களுக்கு முதல்வர் குறித்த தகவல்கள் தெளிவாகக் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே இவர் அட்மிட் ஆகியுள்ளார். இது வெளியில் தெரிந்துவிடும் என்பதற்காக அவ்வப்போது வெளியிலும் வந்து செல்கிறார். நேற்றுகூட சென்னையில் நடந்த கோயில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். இதையெல்லாம் யார் கவனித்துக் கேட்பது.முதல்வருக்கு உடல்நலம் இல்லாத நிலையில் இதுபோன்ற செயல்பாடுகள் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை அல்லவா ஏற்படுத்தும்" என்றார் வருத்தமாக.
இதுபற்றி தேவாவிடம் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டோம். "இதுபோல இழிவான செயல் செய்யவேண்டும் என்ற அவசியமே கிடையாது. அம்மாவுக்கு என்னைப் போன்றவர்களை ரொம்பப் பிடிக்கும் என்பதால் சிலபேர் இப்படிச் செய்கிறார்கள்.அம்மாவுக்கு இப்படி ஆச்சே என்று ஹாஸ்பிடல் வாசலிலேயே இருந்தேன்.பக்கத்தில் இருந்தவர்களிடம் பேசிக்கொண்டேதான் இருந்தேன்.திடீரென்று மயக்கம் வந்தது.மூக்கில் ரத்தம் கொட்டியது.எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

உடனே அப்போலோ மருத்துவமனையிலேயே அட்மிட் செய்யப்பட்டேன். எனது உடல்நிலை குறித்து நான் பொய்க்காரணம் சொல்லவேண்டியது இல்லை. எனக்கு உண்மையில் என்ன நடந்தது என்று ஹாஸ்பிடல் ரெக்கார்டை பார்த்து தெரிந்துகொள்ளட்டும்.இன்று காலையில்கூட அல்ட்ரா சவுண்ட்,சி.டி.ஸ்கேன் செக் அப் செய்தார்கள் எனக்கு.
அம்மாவுக்காக போராட்டம் நடத்தி இரண்டுமுறை சிறைக்குச் சென்று இருக்கிறேன்.1994-ல் இருந்து கட்சியில் இருக்கிறேன்.பலமுறை எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் அப்பாயின்மென்ட் கொடுத்து அம்மா வாழ்த்தியிருக்கிறார். திமுக சம்பந்தப்பட்ட ராஜாத்தியம்மாள் வராங்க. மு.க.ஸ்டாலின் வந்து போகிறார்.அவர்களே வந்து செல்லும்போது நான் திமுகவுக்கு ஏன் தகவல் தரவேண்டும். அம்மா என்றால் எனக்கு உயிர்.எங்களுக்கு குலதெய்வமே அம்மாதான். எம்.ஜி.ஆர்.காலத்தில் இருந்தே நாங்கள் கட்சிக்கு விசுவாசமான குடும்பமாக இருக்கிறோம். என்னைப்பற்றி ஏன் இப்படி சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களை சாமி பார்த்துக்கொள்ளும்." என்றார் கொந்தளிப்போடு.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.