பனாஜி
கோவா மாநிலத்தை சேர்ந்தவர் மோனிகா குர்தே (வயது 39). வாசனை திரவியம் தயாரித்து சர்வதேச அளவில் விற்பனை செய்து வந்தார். சென்னையில் 2009–ம் ஆண்டு முதல் 2011–ம் ஆண்டுவரை நிறுவனம் நடத்தி வந்தார்.
கணவரை பிரிந்து, கோவா தலைநகர் பனாஜி அருகே ஒரு வாடகை குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். அங்கு 6–ந் தேதி, கை–கால்கள் கட்டப்பட்டு நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். அவரது வீட்டில் பெரிய அளவில் கொள்ளை எதுவும் நடக்கவில்லை.
இந்நிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக பெங்களூருவில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் பெயர் ராஜ்குமார் சிங். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். பெங்களூரு போலீஸ் உதவியுடன் அவரை கோவா போலீசார் கைது செய்தனர். நேற்று கோவாவுக்கு அழைத்து வந்தனர்.
கொலைக்கு பிறகு, மோனிகாவின் ஏ.டி.எம். கார்டை கொலையாளி எடுத்துச்சென்று விட்டதை போலீசார் ஏற்கனவே கண்டுபிடித்து இருந்தனர்.
எனவே, அந்த கார்டு பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணித்து வந்தனர். அந்த கார்டு, மராட்டிய மாநிலம் மிராஜ், நாசிக் ஆகிய ஊர்களிலும், பிறகு பெங்களூருவிலும் பயன்படுத்தப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். அதன் அடிப்படையில், ராஜ்குமார் சிங்கை கைது செய்தனர். அவனுடன் போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
ராஜ்குமார் பஞ்சாப்பை சேர்ந்தவன். முன்னதாக மும்பையில் வேலை செய்து உள்ளான். 6 மாதங்களுக்கு முன்புதான் கோவா வந்து உள்ளான். கைகளை கட்டி போட்டு மோனிகாவை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளான். பின்னர் தலையணையை வைத்து மூச்சு திணறடித்து உள்ளான்.
ராஜ்குமார் சிங் மோனிகாவை மூச்சு திணறடித்து கொலை செய்ததாகவும், மோனிகாவை நிர்வாண நிலையில் வீடியோ எடுத்து பிளாக்மெயில் செய்ய நினைத்ததாகவும் கூறி உள்ளான்.
விசாரணையில் ராஜ்குமார் அளித்த வாக்குமூலம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மோனிகாவை மூச்சு திணறடித்ததேன்.முதலில் அவர் மயக்கநிலையில் இருக்கிறார் என்று நினைத்தேன். அவர் பின்னர் எழுந்திருப்பார் என நினைத்து சமையலறைக்குச சென்றேன். அங்கு 2 முட்டைகளை அவித்து சாப்பிட்டேன். பின்னர் வந்து பார்க்கும் போதும் மோனிகா மயக்க நிலையிலேயே இருந்தார். அவரை சோதித்து பார்த்த போது தான் அவர் இறந்தது தெரிய வந்தது. உடனடியாக அந்த இடத்தை விட்டு ஓடி விட்டேன் என கூறி உள்ளான்.
இன்னும் அவன் மோனிகாவை நிர்வாண நிலையில் வீடியோ எடுத்தானா என்பது தெரியவில்லை என போலீசார் கூறி உள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.