Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 24, 2016

பயங்கரவாத குழுக்களை அழிக்காவிட்டால் நாங்களே களம் இறங்குவோம்;பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை


பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. நடவடிக்கை எடுக்க மறுத்தால் நாங்களே களம் இறங்கி பயங்கரவாத குழுக்களை அழிக்க நேரிடம் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்க கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக அளவில் பயங்கரவாத எதிர்ப்பு போரில் பாகிஸ்தானும் இணைந்துள்ளது. அதனால் பயங்கரவாத இயக்கங்களை ஒடுக்க பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆண்டுதோறும் நிதி உதவி அளித்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்கவிடம் இருந்து நிதி உதவி பெற்றுக்கொண்டு பயங்கரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுப்பதில்லை என்று அமெரிக்க கருதுகிறது. இதனால் பாகிஸ்தான் மீது அமெரிக்கா கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தீவிரவாத நிதி தடுப்பு துணை மந்திரி ஆதம் சுஸூபின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பயங்கரவாத அமைப்புகளுக்கு, பாகிஸ்தான் ராணுவ உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் ஆதரவு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதை நாங்கள் ஏற்க முடியாது.  பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. பயங்கரவாத குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்தால் நாங்களே களம் இறங்கி பயங்கரவாத குழுக்களை அழிக்க நேரிடம் என்று பாகிஸ்தானுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.