தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாப்பட்டு வருகிறது. தீபாவளிக்கு முந்தைய நாளில், மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக நாட்டில் உள்ள பெரிய நகரங்களின் கடை வீதிகளில் குவிந்தனர். இதனால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
முக்கிய சந்தை வீதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்த போதும், கடைசி நேரத்தில் மக்கள் தங்கள் சொந்த வாகனங்களில் குவிந்ததால் போக்குவரத்து நெரிசலில் நாட்டின் மெட்ரோ நகரங்கள் சிக்கி தவித்தன. அகமதாபாத், பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத், மும்பை புனே போன்ற நகரங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாகனங்கள் நத்தை போல ஊர்ந்து சென்றன. இதனால், வாகன ஓட்டிகளுக்கு காலவிரயம் மட்டும் அல்லாது எரிபொருளும் வீணாது. தீபாவளிக்கு முந்தைய நாளில் நாடு முழுவதும் ஏற்பட்ட இந்த போக்குவரத்து நெரிசலால் சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு எரிபொருள் வீணாணதாக அசோசாம் (ASSOCHAM )தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.