Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 13, 2016

ஓடும் பஸ்சில் வாலிபர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை பழிக்குப்பழியாக நடந்த பயங்கரம்


சாத்தூரில் ஓடும் பஸ்சில் வாலிபர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். பழிக்குப்பழியாக நடந்த இந்த பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்புலன்ஸ் டிரைவர்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 28). கோவையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கருப்பசாமி சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் மீண்டும் கோவை செல்வதற்காக நேற்று காலை 10½ மணிக்கு கோவில்பட்டி புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கு நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு புறப்பட்டு சென்ற அரசு விரைவு பஸ்சில் ஏறினார். பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

துப்பாக்கிச் சூடு

காலை 11 மணிக்கு சாத்தூர்-விருதுநகர் 4 வழிச்சாலையில் உள்ள தாயில்பட்டி விலக்கு அருகில் பஸ் வந்த போது, பஸ்சுக்குள் திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பயணிகள் அலறி அடித்துக்கொண்டு பஸ்சில் இருந்து கீழே இறங்கினர்.

அப்போது பஸ்சில் இருந்து ஒரு வாலிபர் இறங்கி வேகமாக காமராஜபுரம் வழியாக தப்பி ஓடினார். பயணிகள் சிலர் அவரை விரட்டிப்பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் தப்பி ஓடி விட்டார்.

பஸ்சின் பின்புற வழியின் எதிரில் அமர்ந்து இருந்த கருப்பசாமி ரத்த வெள்ளத்தில் சரிந்து பிணமாக கிடந்தார். அவரது பின் மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்ததை பார்த்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். தப்பி ஓடிய நபர் கருப்பசாமியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது தெரிய வந்தது.

விசாரணை

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கருப்பசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

கருப்பசாமியின் மனைவி மற்றும் உறவினர்கள் சாத்தூர் விரைந்து வந்து உடலை பார்த்து கதறி அழுதனர். கருப்பசாமியின் மனைவி தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது.

பழிக்குப்பழியா?

கொலை செய்யப்பட்ட கருப்பசாமியின் அண்ணன்கள் மந்திரமூர்த்தி, கனகராஜ் ஆகியோர், முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த அப்துல்லா என்பவரை கடந்த 2.7.2016 அன்று கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மந்திரமூர்த்தி, கனகராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது பாளையங்கோட்டை சிறையில் உள்ளனர்.

அந்த கொலை சம்பவத்துக்கு பழிக்குப்பழியாக கூலிப்படையை ஏவி கருப்பசாமி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கருப்பசாமியின் தந்தை காந்தாரி போலீசாரிடம் தெரிவித்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.