Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 26, 2016

மணமகள் சமூக வலைதளம் பயன்படுத்தியதால் திருமணமான 2 மணி நேரத்தில். விவாகரத்து


சவுதி அரேபியாவில் திருமணம் முடிந்த இரண்டே மணி நேரத்தில் உறவை முறித்துக் கொள்வதாக கூறி மணமகன் விவாகரத்துக்கு கோரிக்கை விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவுதியின் ஜெட்டா பகுதியில் ஒரு திருமணம் வெகு விமரிசையாக நடந்துள்ளது. இந்த திருமணத்திற்கு முன்னதாக மணமகன் பெண் வீட்டாருக்கு ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே விதித்திருந்துள்ளார்.

அதன்படி திருமண நிகழ்ச்சிகள் குறித்த எந்த வித புகைப்படங்கள் அல்லது வீடியோ காட்சிகள் உள்ளிட்ட எதுவும் சமூக வலைத்தளங்களில் மணமகளால் பதிவேற்றம் செய்யவே கூடாது என்பதாகும்.

அதுமட்டுமின்றி திருமணத்திற்கு பின்னரும் தமது மனைவி சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது தமக்கு விருப்பம் இல்லை எனவும் அதனால் தாம் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணும் குறித்த நிபந்தனைக்கு கட்டுபட வேண்டும் எனவும் மணப்பெண்ணின் வீட்டாரோடும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் திருமண நிகழ்ச்சிகள் முடிந்த நிலையில் ஆர்வ மிகுதியால் மணமகள் தமது நண்பர்களுக்கு திருமண புகைப்படத்தை ஸ்னாப்சேட் வழியாக பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தெரிய வந்த மணமகன் உடனடியாக விவாகரத்துக்கு கோரியுள்ளார். தமது நிபந்தனைக்கு கட்டுப்படாத பெண்ணுடன் வாழ்வதில் அர்த்தமில்லை என்றும் அவர் பெண்ணின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மணமகளின் சகோதரர் தெரிவிக்கையில், நிபந்தனைக்கு கட்டுப்படுவதை விட மணமகனின் வார்த்தைக்கு மதிப்பளிக்க தமது சகோதரி தவறிவிட்டார். மணமகனின் குறித்த முடிவு தங்களுக்கு அதிர்ச்சியை அளித்தாலும், அவரது முடிவுக்கு எதிராக வாதாடும் நிலையில் தற்போது தங்களது குடும்பம் இல்லை என தெரிவித்துள்ளார்.

ஆனால் குறித்த சம்பவம் இரு குடும்பத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. காரணம் திருமணம் முடிந்து இரண்டே மணி நேரத்தில் மணமகன் விவாகரத்து கோரி அழைப்பு விடுத்துள்ளது மிக கடுமையான செயல் என தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று, இந்த ஆண்டு தொடக்கத்தில், சவுதி மணமகன் ஒருவர் திருமணமான அதே நாளில் விவாகரத்து கோரி அழைப்பு விடுத்துள்ள சம்பவமும் நடந்துள்ளது.

குறித்த மணமகள் தமது திருமண நிகழ்ச்சிகள் குறித்து தமது தோழிகளுடன் வாட்ஸ் அப்பில் சேட் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

மணமக்களுக்கு அவர்கள் முதலிரவை கொண்டாடும் பொருட்டு ஜெட்டா பகுதியில் உள்ள ஒரு ஓட்டேல் ஒன்றில் அறை பதிவு செய்து குடும்பத்தினரால் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் மணமகள் தமது கணவரை கண்டுகொள்ளாமல் சமூக வலைத்தளங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்ததாகவும், மணமகன் நெருக்கம் காட்டிய போதெல்லாம் அவர் தவிர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதில் அதிர்ச்சியடைந்த மணமகன் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் பின்னர் அந்த வாக்குவாதம் அன்றே விவாகரத்தில் முடிந்ததாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.