Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 28, 2016

ரன் அவுட் செய்வதில் மேஜிக் செய்த கேப்டன் டோனி - வீடியோ


ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று நடந்த 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 19 ரன்கள் வித்தியாசத்தில்  நியூசிலாந்து வீழ்த்தியது. நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த போட்டியில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் மகேந்திர சிங் டோனி, 11 ரன்களில் வெளியேறினார்.

பேட்டிங்கில் சொதப்பினாலும், வழக்கம் போல் விக்கெட் கீப்பிங்கில் தோனி அசத்தியுள்ளார். நியூசிலாந்து அணியில் ராஸ் டெய்லர் 35 ரன்கள் எடுத்திருந்த போது டோனி அவரை ஸ்டைலாக ரன் அவுட் செய்தார்.

டோனி எப்போதும் ரன் அவுட் செய்யும் போது ஸ்டெம்பிற்கு அருகில் பந்து இல்லாத போது பந்தை பிடித்த இடத்தில் இருந்து திரும்பி பார்க்காமல் கூட ஸ்டெம்பை நோக்கி எறிவார்.

அதே போன்று ரோஸ் டெய்லர் ஓட்டங்கள் எடுக்கும் போது குல்கர்னி வீசிய பந்தை அசால்டாக ஸ்டெம்பை நோக்கி வீசி அவரை ரன் அவுட் செய்தார். இதனால் ரோஸ் டெய்லர் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.

வீடியோ பார்க்க


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.