Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 31, 2016

அமெரிக்க வருவாய்த்துறை அதிகாரிகள் போல பேசி ‘200 கால்சென்டர்கள் பணமோசடியில் ஈடுபட்டுள்ளன’ தானே போலீஸ் கமிஷனர் தகவல்


தானே,

அமெரிக்க வருவாய்த்துறை அதிகாரிகள் போல பேசி 200 கால்சென்டர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தானே போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார்.

ரூ.500 கோடி மோசடி

தானே மிரா ரோட்டில் போலி கால்சென்டர்கள் நடத்தி அமெரிக்க பிரஜைகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்நாட்டு வருவாய் அதிகாரிகள் போல் பேசி, ரூ.500 கோடி வரையில் மோசடி அரங்கேறியது. இதில் தொடர்புடைய 70–க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட சாகர் தாக்கர் வளைகுடா நாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டார்.

விசாரணையில், அவரை பற்றி பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளது. சாகர் தாக்கர் வருவாய்த்துறை அதிகாரிகள் போல் மட்டுமின்றி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா நாடுகளை சேர்ந்தவர்களிடம் மேலும் பல வழிகளில் மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்.

போலி கால்சென்டர்கள் மூலம் வெளிநாட்டில் சில குறிப்பிட்ட மருந்துபொருட்களை பயன்படுத்துபவர்களின் விவரங்களை சட்டவிரோதமாக தெரிந்துகொண்டு, அவர்களுக்கு போன் செய்து தேவையான மருந்து பொருட்களை தருவதாகவும் பணமோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல கடன் தருவதாகவும் கூறி வெளிநாட்டினரிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

200 கால்சென்டர்கள்

சுமார் 200 கால்சென்டர்கள் அமைத்து வருவாய் அதிகாரி போல பேசி அமெரிக்கர்களிடம் பணமோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக, கொல்கத்தா, குர்காவ் மற்றும் நொய்டா ஆகிய நகரங்களை தலைமையிடமாக கொண்டு மோசடியை அரங்கேற்றி உள்ளனர். தற்போது அங்குள்ள கால்சென்டர்களை இழுத்து மூடிவிட்டனர்.

மேற்கண்ட தகவலை தானே போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் தெரிவித்தார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.