தமிழ்நாட்டில் உள்ள பிரபல ஜவுளிக்கடை மற்றும் அதனுடைய உரிமையாளர்கள் வீடுகள் உள்ளிட்ட 9 இடங்களில் நேற்று ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
ரூ.1 கோடி பறிமுதல்
விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தப்படுகிறதா? என்ற கோணத்தில் கிளியனூர் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை, போலீசார் மறித்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பஸ்சில் இருந்த 4 பைகளில் ரூ.1 கோடி ரொக்கப்பணம் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த பைகளின் மேல் பகுதியில் ‘‘கீ செயின்கள்’’ இருந்தன. அதன் கீழே ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக இருந்தன. ஒவ்வொரு பையிலும் தலா ரூ.25 லட்சம் இருந்தது. இதனை கொண்டு வந்த 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் பிரபல ஜவுளிக்கடையான போத்தீஸ் துணிக்கடை ஊழியர்கள் என்றும், பணத்தை வங்கியில் செலுத்த சென்னைக்கு கொண்டு செல்வதாகவும் போலீசாரிடம் கூறி உள்ளனர். மேலும் இந்தப்பணத்திற்கு உரிய கணக்கு இருப்பதாகவும் போலீசாரிடம் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
வருமானவரித்துறை சோதனை
போலீசார் பறிமுதல் செய்த பணத்தை வானூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் வைத்தனர். உரிய கணக்கை காட்டிவிட்டு பணத்தை பெற்று செல்லுங்கள் என்று போலீசார் கூறி உள்ளனர்.
ஆனால் நேற்று காலை வரை பணத்திற்கான கணக்கு காண்பிக்கப்படவில்லை. இதுகுறித்து வருமானவரித் துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் வருமானவரித் துறையினர் சென்னை மற்றும் புதுச்சேரியில் உள்ள போத்தீஸ் துணிக்கடையில் நேற்று பகல் 12 மணி அளவில் அதிரடி சோதனையை தொடங்கினர். தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.
9 இடங்களில்
இதுகுறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:–
சென்னை தியாகராயநகர் உஸ்மான்சாலை, ஜி.என்.செட்டி ரோடு, புதுச்சேரி, கோவை மற்றும் நெல்லை ஆகிய இடங்களில் உள்ள பிரபல ஜவுளிக்கடையான போத்தீஸ் ஜவுளிக்கடை மற்றும் அதனுடைய உரிமையாளர்கள் வீடு உள்ளிட்ட 9 இடங்களில் 9 வருமானவரித்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறோம்.
இதில் கணக்கில் வராத பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் குறித்து சோதனை நடந்து வருகிறது. எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டது? எவ்வளவு மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது போன்ற தகவல்கள் நாளை (இன்று) தான் தெரியவரும்.
இவ்வாறு வருமானவரித்துறை அதிகாரிகள் கூறினார்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.