ஆஸ்திரேலியாவில் தூவோம்பா பகுதியை சேர்ந்த ஜோஸ்வா டேவிஸ் -அய்லா கிரஸ்வெல் இருவரும் காதலர்கள். ரக்பி வீரரான ஜோஸ்வா சில மாதங்களில் தமது காதலியான அய்லா கிறிஸ்வெலை திருமணம் செய்து கொள்ள இரு வீட்டார் சம்மதத்துடன் முடிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் துரதிஷ்டவசமாக ஜோஸ்வா கடந்த ஆகஸ்ட் மாதம் விபத்து ஒன்றில் மரணமடைந்தார். இதனால் பெரும் துயரத்தில் ஆழ்ந்த அய்லா, தனது காதலர் எப்போதும் தன் அருகிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக அதிரடி முடிவு ஒன்றை தமது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
அய்லாவின் இந்த முடிவு இரு குடும்பத்தினருக்கும் சரி என்று பட்டதால், இறந்த ஜோஸ்வாவின் உயிரணுவில் இருந்து கருவுற முடிவு செய்த அய்லாவுக்கு ஆதரவளித்தனர்.
விளையாட்டு வீரர்கள் பலர் தங்கள் உயிரணுவை மருத்துவமனையில் சேமித்து வைத்திருப்பது போன்று ஜோஷ்வாவும் ஏற்கனவே சேமித்து வைத்திருந்தார்.
இதனையடுத்து நீதிமன்றத்தை நாடிய அய்லா ஜோஷ்வாவின் உயிரணுவை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஜோஷ்வாவுடன் 3 குழந்தைகளை பெற்றெடுக்க முடிவு செய்திருந்ததாகவும், தனது இந்த முடிவில் அவர் கண்டிப்பாக பெருமைப்படுவார் எனவும் நீதிமன்றத்தில் அய்லா வாதிட்டார்.
இதனையடுத்து நீதிமன்றம் அவருக்கு அனுமதி வழங்கியது. மேலும் சேமிக்கப்பட்டிருந்த இந்த விந்தணு, கருவுறுதலை நிகழ்த்தும் அளவிற்கு ஆரோக்கியமாக இருப்பதாகவும் மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து கூடிய விரைவில், செயற்கை கருத்தரித்தல் மூலம் ஜோஸ்வாவின் குழந்தையை தனது வயிற்றில் சுமக்க உள்ளார் அய்லா.”ஜோஸ்வாவும், நானும் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என திட்டமிட்டுருந்தோம். ஆனால் அதற்கு முன்னரே அவர் உயிரிழந்துவிட்டார். இருப்பினும் அவரது கனவை நினைவாக்கும் முயற்சியில் வெற்றி பெற்று விட்டேன்.”என அய்லா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.