Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 22, 2016

நீண்ட கால நட்பு நாடான அமெரிக்காவை பிரிகிறது பிலிப்பைன்ஸ் அதிபர் அறிவிப்பு


சீனாவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டிருக்கும் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்ட்டே, பிலிப்பைன்ஸ்  இனி பெய்ஜிங்கை உதவிக்காக நாடும் என கூறினார்.

நான்கு நாள் சீனப் பயணம் அமைந்துள்ளது. தியனன்மென் சதுக்கத்தில் சீன அதிபர் சீ ஜின்பிங்கைத்  டுட்டர்ட்டே சந்தித்தார். இரு நாட்டுக்கு இடையிலான நம்பிக்கை, நட்புறவு ஆகியவற்றை மேம்படுத்த இரு தலைவர்களும்  ஒப்பந்தம் செய்து கொண்டனர்.அந்தச் சந்திப்பை வரலாற்று சிறப்புமிக்கது என டுட்டர்ட்டே பாராட்டியிருக்கிறார்.

இது குறித்து ரோட்ரிகோ பிலிப்பினோ மற்றும் சீனா தொழிலதிபர்கள் கூட்டத்தில் பேசும் போது ராணுவம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உள்பட அமெரிக்காவிடம் இருந்து  பிரிந்ததை நான் அறிவிக்கிறேன்.என கூறினார்.

சீனாவுடனான அரசதந்திர உறவைத்  டுட்டர்ட்டே சரிசெய்யப் பார்க்கிறார் என்ற கருத்து நிலவுகிறது.இருதரப்புக்கும் பயனளிக்கும் வகையில் வர்த்தகம், உள்ளமைப்பு வசதிகள், வேளாண்மை போன்ற துறைகளுக்கான 13 உடன்பாடுகள் கையெழுத்தாகின.

அவரின் அந்தக் கருத்துக்களால் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் நிர்வாகம் குழப்பம் அடைந்திருப்பதாக அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் ஜான் கெர்பி தெரிவித்து உள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த பிலிப்பைன்ஸ் இதுவரை அதிகாரபூர்வமான கோரிக்கை எதனையும் முன்வைக்கவில்லை என அமெரிக்காவின் மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் தனது நீண்ட கால நட்பு நாடான அமெரிக்காவிடம் இருந்து பிரியும் நேரம் வந்துவிட்டது என அந்நாட்டு அதிபர் அறிவித்திருப்பது குறித்து அமெரிக்கா விளக்கம் கேட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் அதிபர் சமீப காலங்களாக அமெரிக்காவையும் அமெரிக்க அதிபர் ஒபாமாவையும் தாக்கி பேசி வந்தது குறிப்பிட தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.