காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி ராணுவம் முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 18ம் தேதி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தினர் 19 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் நேற்று முன்தினம் இரவு ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் எல்லைக்குள் 2-கி.மீ தொலைவு உள்ளே சென்று தாக்குதல்கள் நடத்தப்பட்டன.இந்த தாக்குதலின்போது பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் 7 முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், 55 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், பாகிஸ்தான் சிப்பாய்கள் 2 பேர் உயிரிழந்ததாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்திய தரப்பில் தாக்குதல் தொடர்வதால் எல்லைப்பகுதிகளில் பதட்டம் ஏற்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து எல்லை பகுதியில் உள்ள சுமார் ஆயிரம் கிராமங்களில் இருந்து 15 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
கடந்த 3 நாட்களாக அதிகாலையில் தொடர்ந்து பாகிஸ்தான் படைகள் காஷ்மீரில் இந்திய எல்லைப் பகுதியில் துப்பாக்கியால் சுட்டு வந்தன. இன்றும் பாகிஸ்தான் படைகள் காஷ்மீரின் அக்னூர் செக்டார் பகுதியில் பல்லன்வாலா என்ற இடத்தில் அத்துமீறலில் ஈடுபட்டது. கடுமையாக குண்டுகளை வீசியது. ராணுவ நிலைகள் தவிர குடியிருப்பு பகுதிகள் மீதும் தாக்குதல் நடத்தியது. எந்திர துப்பாக்கியாலும் சரமாரியாக சுட்டனர்.
அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கி காலை 6 மணி வரை 3 மணி நேரம் இந்த தாக்குதல் நீடித்தது. இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர்.ஏற்கனவே அந்த பகுதி யில் வசித்த கிராம மக்களை இந்திய படைகள் பத்திரமாக வெளியேற்றி விட்டதால் சேதம் இல்லை. பாதோ, சானோ கிராமங் களில் வீடுகள் சேதம் அடைந்தன. தொடர்ந்து எல்லைப் பகுதியில் வசிக் கும் மக்கள் வெளியேற்றப் பட்டு வருகிறார்கள். இந்திய எல்லைப்பகுதியில் பாது காப்பு படையினர் குவிக் கப்பட்டு உள்ளனர்.
பாகிஸ்தான் அத்து மீறலைத் தொடர்ந்து ராணுவ தளபதி தல்பீர்சிங் இன்று அவசரமாக காஷ்மீர் மாநிலம் விரைந்தார். அங்கு வடக்கு பிராந்திய ராணுவத்தின் நடவடிக் கைகள் குறித்தும் எல்லை நெடுகிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்து பார்வையிட்டார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.