காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாமில் கடந்த 18-ந்தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த புதன்கிழமை நள்ளிரவு இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவியது. அங்கிருந்த 7 பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அவற்றை முற்றிலுமாக அழித்தது.
இதனால் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தலாம் என்றும் அல்லது ஏற்கனவே ஊடுருவியவர்கள் தலைநகர் டெல்லி உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் மக்கள் கூடும் இடங்களில் நாசவேலைகளில் ஈடுபடலாம் என்றும் மத்திய உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்து உள்ளது.
நேற்றும் பாரமுல்லா பாராமுல்லா பகுதியில் இந்திய ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். எல்லைப்பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தனர். இரு நாட்டு எல்லையிலும் பதட்டமான சூழல் நிலவி வருவதையடுத்து எல்லையோர கிராம மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இதற்கிடையே, இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதட்டமான சூழலை தணிக்க இந்தியாவும் பாகிஸ்தானும் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் , பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நசீர் ஜனுஜா ஆகியோர் தொலைபேசியில் பேசியதாக பாகிஸ்தானின் மூத்த தூதரக அதிகாரியான சர்தாஜ் ஆஜிஸ் தெரிவித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன
இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் இடையேயான பேச்சுவார்த்தையின் போது பதட்டத்தை தணிக்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டதாகவும் பாகிஸ்தானில் இருந்து வெளி வரும் இணையதள செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.