Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 23, 2016

ஓய்வுக்கு பின் ஒபாமா..!


அமெரிக்காவின் 44–வது ஜனாதிபதியாக கோலோச்சி வரும் பராக் ஒபாமாவின் பதவி காலம் இன்னும் ஒரு சில மாதங்களில் முடிவுக்கு வர இருக்கிறது. இதையடுத்து ஓய்விற்கு பிறகான வாழ்க்கையை பற்றி தீவிரமாக திட்டமிட்டு வருகிறார், ஒபாமா. 10 வருடங்களாக, பரபரப்பாக பயணித்து வந்த ஒபாமாவிற்கு, இனி வரவிருக்கும் ஓய்வு காலம் வசந்த காலமாக மாற இருக்கிறது. ஆம்..! ஒபாமாவிற்கு மிகவும் பிடித்தமான கூடைப்பந்தாட்டத்தை, விளையாடி மகிழ இருக்கிறார். இதற்காக கூடைப்பந்தாட்ட அணி ஒன்றையும் புதிதாக உருவாக்கி வழி நடத்தி செல்ல இருக்கிறார். தனது ஓய்வு கால திட்டமிடல் குறித்து ஒபாமா பகிர்ந்து கொண்டதை பார்ப்போம்.. 

‘‘அமெரிக்காவின் எதிர் காலமாக இருந்தாலும் சரி, என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் எதிர் காலமாக இருந்தாலும் சரி... அதற்கான கலந்தாலோசனை நெருங்கிய நண்பரும், அமெரிக்க துணை ஜனாதிபதியுமான ஜியோ பிடனுடன் தான் நிகழ்ந்தது. எங்களுடைய கூட்டணியில்தான் பல துணிச்சலான காரியங்களை செய்து முடித்திருக்கிறோம். ‘ஒபாமாவின் கடைசி 100 நாட்கள்’ என்று ஊடகங்கள் வர்ணித்ததை பற்றி ஜியோ என்னிடம் பகிர்ந்து கொண்டார். அதுவரை நாங்கள் அமெரிக்காவின் நலனுக்காக மட்டுமே மனம் திறந்து பேசி இருக்கிறோம். முதல் முறையாக அவர் என்னுடைய எதிர்கால திட்டங்களை பற்றி கேட்க ஆரம்பித்தார். நானும் நகைச்சுவையாக ‘ஆமாம்..! நண்பா... ஓய்விற்கு பிறகு நம்முடைய விடியற்பொழுது மதியம் 12 மணியை தொட்டுவிடும். அதிகாலை தூக்கத்தை, அலாரம் வைத்து ரசித்து தூங்கவேண்டும்’ என்று கூறினேன். ஆனால் என்னுடைய பதில் ஜியோவிற்கு மகிழ்ச்சியை தரவில்லை. ஏனெனில் ஓய்விற்கு பிறகான வாழ்க்கையை நான், இன்னும் திட்டமிடவில்லை என்பதை அவர், நன்கு உணர்ந்திருந்தார். அவர் என்னிடம்... ‘நண்பா..! உனக்குத்தான் கூடைப்பந்தாட்டம் விளையாட பிடிக்குமே, என்.பி.ஏ. சாம்பியன்ஷிப் விளையாட்டுகளில் பங்கேற்று வரும் ஏதாவது ஒரு அணியை வாங்கி வழிநடத்தலாமே..!’ என்ற யோசனை கூறினார். 
உடனே நான், ‘நல்ல முடிவுதான் ஜியோ..! ஆனால் மிச்செலின் ஷாப்பிங் மோகத்திற்கு இடையே கூடைப்பந்தாட்டத்தை எப்படி வழிநடத்த முடியும். 

சொல்லுங்கள்...!. ஜனாதிபதியாக இருக்கும் சமயத்திலேயே என்னை அடிக்கடி ஷாப்பிங்கிற்கு இழுத்து சென்றுவிடுகிறாள். ஒருவேளை மிச்செலிடம் இருந்து தப்பினாலும், மகள்களிடம் தப்பிக்க முடியாது. ஏனெனில் வெனீஸ், நார்வே, இங்கிலாந்து... என பல சுற்றுலா பயணங்களை, குடும்ப டைரியில் குறித்து வைத்திருக்கிறார்கள். இதற்கிடையில் பெயர் குழப்பத்தில் ரத்தாகி போன என்னுடைய ஓட்டுநர் உரிமத்தையும் திரும்ப பெறவேண்டும். அப்போது தான் தங்கை, தம்பி என பரந்துவிரிந்திருக்கும் உறவுகளின் குடும்ப விழாக்களில் கலந்து கொள்ள முடியும். இல்லையேல் ஜனாதிபதி அந்தஸ்துடன், ‘ஒபாமா’ குடும்பத்தின் உறுப்பினர் அந்தஸ்தும் பறிபோய்விடும். இதற்கிடையில் நண்பர்களுடன் பியர் விருந்து, மிச்செலுக்கு தெரியாமல் டேட்டிங்... என ஏகப்பட்ட வேலைகள் இருக்கிறது நண்பா...! 

இருப்பினும் நீ சொன்னபடியே கூடைப்பந்தாட்ட அணியை வழிநடத்தலாம். ஆனால் அது நம்மை போன்ற நண்பர்கள் குழுவாக இருக்கவேண்டும். முதல் வீரராக நான் இணைகிறேன். நம்முடைய ஒட்டுமொத்த நண்பர்களையும் அணியில் சேர்த்து ‘நியூ ஒயிட் ஹவுஸ்’ அல்லது ‘ஓவல் ஒர்க்கர்ஸ்’ என்ற பெயரில் புதிய அணியை உருவாக்குவோம். வாய்ப்பு கிடைத்தால் என்.பி.ஏ. சாம்பியன் அணிகளுடனும் மோதி விளையாடுவோம்’’ என்று கூறி ஜியோவையும் பரபரப்பாக இயங்க வைத்து விட்டார். 

 ஆம்..! ஒபாமாவின் வார்த்தைக்கு இணங்க... ஜியோவும் புது அணியை உருவாக்கி வருகிறார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.