ரூ.1 கோடி கேட்டு சர்தார் தாராசிங் எம்.எல்.ஏ.வுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை முல்லுண்டு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. சர்தார் தாராசிங். இவரது வீடு சயான் கோலிவாடா பஞ்சாபிகேம்பில் உள்ளது. இதன் அருகே அவரது அலுவலகமும் உள்ளது. சர்தார் தாராசிங் தினமும் முல்லுண்டு செல்வதற்கு முன்பாக ஒரு மணி நேரம் தன்னுடைய அலுவலகத்திற்கு சென்று விட்டு செல்வது வழக்கம்.
இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சர்தார் தாராசிங் அலுவலகம் அருகே சென்ற வாலிபர் ஒருவர் தனது கையில் இருந்த கடிதத்தை அலுவலகத்திற்குள் வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
அந்த கடிதத்தை அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் பெண் ஊழியர் ஒருவர் எடுத்து பார்த்தார். அந்த கடிதம் சர்தார் தாராசிங் எம்.எல்.ஏ.வுக்கு எழுதப்பட்டு இருந்தது. இதனையடுத்து அவர் சர்தார் தாராசிங் எம்.எல்.ஏ.விடம் கடிதத்தை கொடுத்தார். அதில், ‘உயிர் மேல் ஆசையிருந்தால் ரூ.1 கோடியை நாளை மாட்டுங்கா பார்சி காலனியில் தனியாக வந்து என்னிடம் கொடுக்க வேண்டும்’ என்று எழுதி இருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனே அண்டாப்ஹில் போலீஸ் நிலையத்தில் கடிதத்தை கொடுத்து புகார் பதிவு செய்தார். இந்தநிலையில், மறுநாள் இன்னொரு கடிதமும் அவரது அலுவலக கதவில் சொருகி வைக்கப்பட்டு இருந்தது. அதிலும், ரூ.1 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.
இந்த கடிதத்தையும் சர்தார் தாராசிங் எம்.எல்.ஏ. அண்டாப்ஹில் போலீசாரிடம் கொடுத்தார். இதையடுத்து போலீசார் அடையாளம் தெரியாத மர்மநபர்கள் மீது கொலை மிரட்டல், மிரட்டி பணம் பறிப்பு உள்ளிட்ட குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடிவருகின்றனர்.
கடிதத்தை போட்டுச்சென்ற வாலிபரை அடையாளம் காண்பதற்காக போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக துணை போலீஸ் கமிஷனர் என்.அம்பிகா கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.