Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 31, 2016

ஆஸ்திரேலிய பிரதமருடன் மோடி தொலைபேசியில் பேச்சு இந்திய டிரைவர் உயிரோடு எரித்து கொல்லப்பட்டது பற்றி கவலை தெரிவித்தார்


புதுடெல்லி,

ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் நகராட்சி கவுன்சில் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்தவர் இந்தியர், மன்மீத் அலிசீர் (வயது 29). இவர் அங்கு கடந்த 28–ந் தேதி ஓடும் பஸ்சில் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்டார். நல்ல பாடகராக பஞ்சாப் மக்களிடம் அறியப்பட்டிருந்த மன்மீத் அலிசீரின் படுகொலை, அந்த இன மக்களிடையே மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்லுடன் இன்று தொலைபேசியில் பேசினார்.

அவருக்கு தீபாவளி வாழ்த்துகள் கூறிய மோடி, மன்மீத் அலிசீர் கொல்லப்பட்டது குறித்த பிரச்சினையை எழுப்பினார். அவரது படுகொலையால் இந்தியாவில் கவலை எழுந்திருப்பது குறித்து எடுத்துரைத்தார். இதில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதற்கு மால்கம் டர்ன்புல் அதிர்ச்சியும், வேதனையும் தெரிவித்ததுடன், இது தொடர்பாக விசாரணை நடந்துவருவதாக தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக 48 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.