Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 3, 2016

‘நான் மட்டும் அதிகாரத்தில் இருந்திருந்தால் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்து இருப்பேன்’ பர்வேஸ் முஷரப்


வாஷிங்டன்,

‘நான் மட்டும் அதிகாரத்தில் இருந்திருந்தால் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்து இருப்பேன்’ என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் பேசிஉள்ளார்.

உரி ராணுவ முகாம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. 55 தீவிரவாதிகளை கொன்று அவர்களின் முகாம்கள் அழிக்கப்பட்டன. இது பாகிஸ்தானுக்கு அச்சத்தை விளைவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் பத்திரிகைகளுக்கு அளித்து உள்ள பேட்டியில், ‘நான் மட்டும் அதிகாரத்தில் இருந்திருந்தால் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்து இருப்பேன்’ என்று கூறிஉள்ளார்.

பர்வேஸ் முஷரப் அளித்து உள்ள பேட்டியில் ‘‘பாகிஸ்தானுக்குள் நுழைந்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. மிகவும் சீரியசான விஷயமாகும். போர் நடத்த வேண்டும் என்ற கட்டுக்கடங்காத எரிச்சல் இந்தியாவிடம் உள்ளது. ஆனால் இந்த மனோபாவம் பாகிஸ்தானிடம் இல்லை. இந்த நோக்கம் எப்போதும் அவர்களிடம் (இந்தியாவிடம்) தான் உள்ளது. இது தற்போது மட்டுமல்ல. எப்போதுமே இந்த எண்ணம் அவர்களுக்கு உண்டு.

சுதந்திரம் அடைந்ததில் இருந்தே பாகிஸ்தான் ஆட்சி அதிகாரத்தில் ராணுவத்தின் பங்கு முக்கியமானதாக இருந்து வருகிறது. ஏனெனில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படும் அரசு சரியான முறையில் வழி நடத்தப்படாததே காரணமாகும். பொதுவாக பாகிஸ்தான் ஜனநாயக அமைப்பில் ஒழுங்கான நடைமுறைகள் மற்றும் அதிகார மைய அமைப்புகள் இல்லை. அதுவே தடை மற்றும் நடு நிலைப்படுத்துதல் உள்ளிட்ட தன்மைகள் ஏற்பட வழி இல்லாமல் போய்விட்டது. அரசியல் அமைப்பு சட்டத்திலும் அதற்கான வழி முறைகள் இல்லை.

எனவே அமெரிக்கா பாகிஸ்தானை தனது வசதிக்கு பயன்படுத்தி கொண்டது. அதன் மேலான கொள்கைகளை குழி தோண்டி புதைத்து விட்டது. தற்போதுள்ள சூழ்நிலையில் நான் மட்டும் ஆட்சி அதி காரத்தில் இருந்தால் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்து இருப்பேன். என்று கூறிஉள்ளார்.

தேசத்துரோக வழக்கு

பாகிஸ்தானில் 2001–2008 காலகட்டத்தில் அதிபராக இருந்து கொடி கட்டிப்பறந்தவர், பர்வேஸ் முஷரப் (வயது 72).

இவர் தனது ஆட்சிக்காலத்தில் 2007–ம் ஆண்டு, நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். அரசியல் சாசனத்தை இடைநீக்கம் செய்தார். தற்போது ஜனநாயக ரீதியிலான ஆட்சி வந்தபிறகு, அவர் மீது கோர்ட்டில் தேசத்துரோக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கிலும் முஷரப் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த மார்ச் மாதம், அவர் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. அவர் மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் துபாய்க்கு சென்றார். சிகிச்சை முடிந்து அடுத்த சில வாரங்களில் அல்லது மாதங்களில் நாடு திரும்புவேன் என அப்போது கூறினார். ஆனால் திரும்பவில்லை. பாகிஸ்தானில் நடைபெறும் தேசத்துரோக வழக்கிலும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

தேசத்துரோக வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் கடந்த ஜூலையில், முஷரப்பின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும், வங்கிக்கணக்குகளை முடக்கவும் பாகிஸ்தான் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இப்போது பர்வேஸ் முஷரப் ராணுவம் தனக்கு வெளிப்படையாக உதவியது என்பதை குறிப்பிட்டு உள்ளார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.