கோவாவில் வாசனை திரவிய பெண் தொழில் அதிபர் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்த அவர் சென்னையில் நிறுவனம் நடத்தி வந்தவர் என தெரியவந்துள்ளது.
பெண் தொழில் அதிபர்
கோவாவை சேர்ந்தவர் மோனிகா குர்தே (வயது 39). வாசனை திரவியம் தயாரித்து சர்வதேச அளவில் விற்பனை செய்து வந்த இவர், சென்னையிலும் 2009-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நிறுவனம் நடத்தி வந்தார். இவரது கணவர் பரத் ராமாமிருதம், தமிழகத்தை சேர்ந்த புகைப்பட நிபுணர் ஆவார்.
கணவன்-மனைவி இருவரும் கடந்த ஆண்டு கோவாவில் உள்ள சுற்றுலா பகுதியான கலாங்குடே கடற்கரை பகுதியில் வசித்து வந்தனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக மோனிகா கணவரை பிரிந்து கோவா தலைநகர் பனாஜி அருகே உள்ள சங்கோல்டா எனும் கிராமத்தில் தனியாக வசித்து வந்தார்.
நிர்வாண நிலையில்...
கடந்த 6-ந்தேதி காலை வேலைக்கார பெண் வழக்கம் போல வந்து மோனிகாவின் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினார். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தன்னிடம் இருந்த மற்றொரு சாவி மூலம் கதவை திறந்து உள்ளே சென்றார்.
அப்போது அங்கு மோனிகா கை,கால்கள் கட்டப்பட்டு நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். அவரது வீட்டில் நகை, பணம் எதுவும் கொள்ளை போகவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மோனிகா கற்பழித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
கேமராக்கள் ஆய்வு
ஆனால், அவரை கொலை செய்தவர் யார்? என்ற விவரம் தெரியவில்லை. மோனிகாவுக்கு அறிமுகமான நபர் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்பட்டது. மோனிகா கொலை செய்யப்பட்டது குறித்து அவரது கணவருக்கும், சகோதரருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மோனிகாவின் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மோனிகாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் முழு விவரமும் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
கொலையாளிகளை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் மும்பை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு விரைந்துள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.