மலேசியா நாட்டில் உள்ள சம்வே சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். தினமும் பள்ளிக்கூடம் முடிந்து சைனீஸ் மொழியை கற்கும் சிறப்பு வகுப்புக்கு செல்வது அந்த சிறுமியின் வழக்கமாகும். ஆனால் நேற்று அந்த சிறப்பு வகுப்புக்கு அந்த சிறுமி செல்லவில்லை என கூறப்படுகிறது.
சிறுமி சிறப்பு வகுப்புக்கு போகாததால் கோபமடைந்த அவரின் தாய் அவரை சாலையோரத்தில் உள்ள ஒரு தூணில் சங்கிலியால் கால்களை கட்டி வைத்து கொடுமைப்படுத்தியுள்ளார். மேலும் அவரை இரவு பத்து மணி வரை விடுவிக்காமல் இருந்துள்ளார்.
இந்த பரிதாப காட்சியை அந்த சாலையை கடந்து செல்லும் மக்கள் பார்த்து சென்றுள்ளனர். இது குறித்து ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமியை கொடுமைப்படுத்திய அவர் தாய் மீது போலீசாரின் நடவடிக்கை பாயும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.