மராட்டிய மாநிலம் சோலாப்பூர் அருகே உள்ள சதாரா என்ற இடத்தை சேர்ந்தவர் அனில் (வயது 38). இவரது மனைவி சரிதா (47).
இவர்கள் 2004-ம் ஆண்டு குட்டாப்பூர் தானம்மன் கோவிலில் நடந்த பல ஜோடிகள் கூட்டு திருமண நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொண்டனர்.
சரிதா அதிகம் படித்தவர். பள்ளி ஒன்றில் முதல்வராக இருந்தார். அனில் சரியாக படிக்கவில்லை. வேலை ஏதும் இல்லாமல் இருந்தார். அது மட்டுமல்ல, அனிலை விட சரிதா 9 வயது மூத்தவர். ஆனாலும், அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
அவர்கள் சில ஆண்டுகள் சந்தோஷமாக குடும்பம் நடத்தினார்கள். அதன்பிறகு கணவன்- மனைவிக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கணவர் அனிலை சரிதா வீட்டை விட்டு வெளியே விரட்டி விட்டார். இதனால் வசிப்பிடம் இல்லாமல் தெருவில் வசிக்க வேண்டிய நிலை அனிலுக்கு ஏற்பட்டது.
இதையடுத்து சோலாப்பூர் கோர்ட்டில் அனில் வழக்கு தொடர்ந்தார். நான் வேலை இல்லாமல் இருந்ததால் என்னை என் மனைவி வீட்டு வேலை செய்ய வைத்தார். மேலும் என்னை கொடுமைப்படுத்தினார். ஒரு கட்டத்தில் என்னை வீட்டை விட்டே வெளியேற்றி விட்டார். அவர் நல்ல வேலையில் இருக்கிறார். எனவே, எனது வாழ்க்கைக்கு அவர் உதவி செய்ய உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறி இருந்தார்.
இந்த வழக்கு நீதிபி பி.வி. பட்டீல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனைவி சரிதா ஆஜராகி எனது கணவர் சொல்வது எல்லாம் பொய். அவர் என்னை வீட்டில் அடித்து உதைத்தார். மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொடர்ந்து துன்புறுத்தி வந்தார். ஒரு தடவை தீபாவளி பண்டிகையின் போது அவர் அடித்ததில் எனக்கு தலையில் காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டது. எனவேதான் அவருடன் சேர்ந்து வாழ முடியாத நிலையில் இருக்கிறேன் என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து நீதிபதி வீட்டை விட்டு விரட்டப்பட்ட கணவருக்கு சரிதா மாதா மாதம் ரூ.2 ஆயிரம் உதவி தொகை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.