முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக, செப்., 22ல், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு, லண்டனைச் சேர்ந்த, நுரையீரல் தொற்றுநோய் சிகிச்சை நிபுணர், டாக்டர் ரிச்சர்ட் பேல் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கடந்த இரு நாட்களாக, சிங்கப்பூரை சேர்ந்த, இரண்டு பெண் பிசியோதெரபிஸ்ட் நிபுணர்களும் சிகிச்சை அளித்துவருகின்றனர்.
வீடு திரும்புவார்
மருத்துவர்களின் தீவிர சிகிச்சை காரணமாக, முதல்வர் வேகமாக குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.இதுகுறித்து, அ.தி.மு.க., செய்தித் தொடர்பாளர்கள், பண்ருட்டி ராமச்சந்திரன்நாஞ்சில் சம்பத் ஆகியோர் கூறுகையில், 'மக்களின் ஏகோபித்த பிரார்த்தனை காரணமாகவும், சிறப்பான மருத்துவ சிகிச்சை, காரணமாகவும், முதல்வர் நலமடைந்து வருகிறார். விரைவில் குணமடைந்து, வீடு திரும்புவார்; நாட்டுப் பணியாற்றுவார்' என்றனர்.
முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறுகையில், 'முதல்வர், தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்தார்' என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.