பெய்ஜிங்,
இந்தியாவில் சீன பொருட்களை புறக்கணிக்க பிரச்சாரம் தீவிரம் அடைந்து உள்ளநிலையில்; நட்புறவை பாதிக்கும் என்று இந்தியாவிற்கு சீன அரசு மீடியா எச்சரிக்கை விடுத்து உள்ளது.
பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடந்த 2001-ம் ஆண்டே உலகளாவிய தடை விதித்தது. ஆனால் அந்த அமைப்பின் தலைவனான மசூத் அசார் மீது தடை விதிக்கும் முடிவை நிறுத்தி வைத்திருப்பது இன்றுவரையில் புரியாத புதிராக உள்ளது. இவ்விவகாரத்தில் இந்தியாவின் ஒவ்வொரு நகர்வுக்கும் வீட்டோ அதிகாரம் கொண்ட சீனா தடையை ஏற்படுத்தி வருகிறது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் எச்சரிக்கையை மீறி சீனா செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தியாவின் முயற்சிக்கு தடை விதிக்கும் ’சீனாவின் பொருட்களை நிராகரியுங்கள்’ என்ற பிரச்சாரமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த விழா காலங்களில் சீன தயாரிப்பு பொருட்களை நிராகரியுங்கள் என்று சமூக வலைதளங்களில் பிரச்சாரம் வலுப்பெற்று உள்ளது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனாவின் செயல்பாட்டினால் கடும் கோபம் அடைந்துஉள்ள மக்கள் வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் சீன பொருட்களை நிராகரியுங்கள் என்ற கோரிக்கையை விடுத்து வருகின்றனர். மேலும் இந்தியாவுக்கு எதிராக பிரம்மபுத்திராவின் கிளை நதியை சீனா மறித்து உள்ளது கோபத்தினை அதிகமாக்கிஉள்ளது.
சீன அரசு மீடியா எச்சரிக்கை
இந்நிலையில் இந்தியாவில் சீன பொருட்களை புறக்கணிப்பது இருதரப்பு நட்புறவை பாதிக்கும் என்று இந்தியாவிற்கு சீன அரசு மீடியா எச்சரிக்கை விடுத்து உள்ளது.

அரசியல் காரணத்திற்காக இந்தியாவில் சீன நிறுவனங்களின் பொருட்களை புறக்கணிப்பு பிரச்சாரமானது இந்தியா - சீனா வர்த்தக பற்றாக்குறைக்கு உதவியாக இருக்காது, மாறாக இருதரப்பு நட்புறவை பாதிக்கும் என்று சீனாவின் அரசு மீடியா எச்சரிக்கை விடுத்து உள்ளது. குளோபல் டைம்ஸ் கட்டுரையில், “சீனாவின் சுங்க பொது நிர்வாக தரவு காட்டுகிறது செப்டம்பரில் இந்தியா சீனாவிற்கு 922 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவில் (6 ஆயிரம் கோடி மதிப்பில்) பொருட்களை ஏற்றுமதி செய்து உள்ளது, சீனாவிடம் இருந்து 5.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் (36 ஆயிரம் கோடி மதிப்பில்) இறக்குமதி செய்து உள்ளது.”
இந்தியா சீனாவிடம் இருந்து மின்னணு பொருட்கள், தொலைத் தொடர்பு உபகரணங்கள், ரசாயனப் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களை இறக்குமதி செய்கிறது, இந்தியா, சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதில் தாது, பிளாஸ்டிக் மற்றும் பருத்தி ஆகியவை அடங்கும் என்று குறிப்பிட்டு உள்ளது. இந்தியாவின் இடைக்கால புள்ளி விபரங்கள் இருநாடுகள் இடையே இருதரப்பு வர்த்தகமானது 2015-16ல் 70.73 பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் இருந்தது, இது முந்தைய ஆண்டுடன் (72.34 பில்லியன் அமெரிக்க டாலர்) ஒப்பீடுகையில் குறைவாகும்.
பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி சீனாவுடன் வர்த்தக பற்றாக்குறையானது 2015-16ல் 52.68 பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் இருந்தது. இதுவே முந்தையை நிதியாண்டில் 48.48 பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் இருந்தது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.