சென்னை
சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க தி.மு.க. தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்திஅம்மாள் வந்தார். அங்கிருந்த சசிகலாவிடம் உடல்நலம் குறித்து விசாரித்து சென்றார்.
தீவிர சிகிச்சை
தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த மாதம் (செப்டம்பர்) 22-ந் தேதி இரவு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
நேற்று 23-வது நாளாக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையை 24 மணி நேரமும் டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.
இதற்கிடையே, லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலேவும், எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரும்பி சென்றது. முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மீண்டும் சிகிச்சை அளிப்பதற்காக நேற்று முன்தினம் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள் மீண்டும் சென்னை வந்தனர்.
எய்ம்ஸ் டாக்டர்கள் வருகை
2-வது நாளாக நேற்றும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை மேற்கொண்டனர். காலை 10.45 மணிக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்த எய்ம்ஸ் டாக்டர்கள் மதியம் 12.35 மணி வரை அங்கிருந்தனர். பின்னர், காரில் வெளியே சென்ற அவர்கள் மீண்டும் மாலை 5.15 மணிக்கு ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சையை தொடர்ந்தனர்.
இந்த நிலையில், லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலேவும் நேற்று இரவு சென்னை வந்தார். அவரும் எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவுடன் இணைந்து கொண்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தார். இவர்கள் அனைவரும் இன்னும் ஒரு சில நாட்கள் சென்னையிலேயே தங்கியிருந்து சிகிச்சையை மேற்கொள்வார்கள் என தெரிகிறது.
ராஜாத்தி அம்மாள்
சிகிச்சை ஒரு பக்கம் நடந்தாலும், மற்றொரு பக்கம் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிவதற்காக தினமும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அரசியல் தலைவர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் வந்த வண்ணம் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு தி.மு.க. தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பார்ப்பதற்காக வந்தார். அங்கிருந்த சசிகலாவிடம் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரித்தார். அவரிடம் சசிகலா, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை தேறிவருவதாக தெரிவித்தார். அதன்பின்னர், ராஜாத்தி அம்மாள் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பார்ப்பதற்காக நேற்று தமிழக முன்னாள் கவர்னர் கே.ரோசய்யா, கேரள மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ரமேஷ் சென்னிதலா, அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி ஆகியோர் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.
கே.ரோசய்யா
பின்னர், தமிழக முன்னாள் கவர்னர் கே.ரோசய்யா நிருபர்களிடம் கூறியதாவது:-
உடல்நல குறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க வந்தேன். அங்கிருந்த டாக்டர்களையும், அமைச்சர்களையும் சந்தித்து அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தேன். சிகிச்சைக்கு ஜெயலலிதா ஒத்துழைப்பு கொடுப்பதாக தெரிவித்தனர். இன்னும் சில நாட்களில் ஜெயலலிதா பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்று நம்புகிறேன்.
இது என்னுடைய பிரார்த்தனை மட்டுமல்ல. ஆயிரக்கணக்கான மக்கள், ஜெயலலிதா நூறாண்டுகள் நலமுடன் வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்கின்றனர். அதனால் கடவுள் இந்த பிரார்த்தனைகளுக்கு செவி சாய்த்து ஜெயலலிதாவுக்கு நல்ல ஆரோக்கியத்தை தருவார் என்று நம்புகிறேன். ஜெயலலிதா விரைவில் குணமடைந்து மீண்டும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பண்ருட்டி ராமச்சந்திரன்
அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பெற்று வருகிறார். விரைவில் அவர் பூரண குணமடைந்து விடுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலை குறித்து பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். தற்போதைய சூழ்நிலையில், அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று எல்லோரும் பிரார்த்தனை செய்வோம்.
காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. இந்த நிலையில், அரசியல் ரீதியாக நடவடிக்கையை அதிவேகப்படுத்த தேவையில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என காவிரி நடுவர் மன்றம் என்று தீர்ப்பு அளித்ததோ, அன்றே அதை அமைத்திருக்க வேண்டும். அது தொடர்பாக வரும் 18-ந் தேதி நல்ல தீர்ப்பு கிடைக்கும்.
இந்த சூழ்நிலையில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்ட வேண்டிய அவசியம் இல்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டே இருப்பார். அதை பெரிதுபடுத்த வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு நேற்று அ.தி.மு.க. மகளிரணி சார்பில் யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பாதிரியார்களும் அங்கு கூடிநின்று சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.