அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக ரியல் எஸ்டேட் தொழில் அதிபரும் கோடீசுவரருமான டொனால்டு டுடிரம்ப் போட்டியிடுகிறார். அவர் மீது பெண்கள் குறித்து இழிவான கருத்துக்கள் கூறிய வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 2005–ம் ஆண்டு பெண்களைப் பற்றி மிக மோசமாக கருத்து தெரிவித்திருக்கிறார். அதில் அவர், பெண்களிடம் தான் மோசமாக நடந்து கொண்டது பற்றி குறிப்பிட்டதுடன், பிரபலமாக இருக்கிறபோது எதையும் ஒருவர் செய்யலாம் என கூறி உள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் டிரம்புக்கு சொந்தக்கட்சியான குடியரசு கட்சியில் எதிர்ப்பு வலுத்தது. தலைவர்கள் பலரும் அவருக்கு அளித்துள்ள ஆதரவை திரும்பப் பெற்றதுடன், போட்டியில் இருந்து அவர் விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஆனால் மன்னிப்பு கோரிய டிரம்ப் விலகப்போவது கிடையாது என்றார். இதற்கிடையே இரு பெண்கள் டிரம்ப் எங்களை தவறான முறையில் தொட்டார், வலுக்கட்டாயமாக முத்தமிட்டார் என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு பேட்டியளித்தனர். இதேபோன்று 10 பெண்கள் அவர் மீது ‘பாலியல்’ புகார்களை கூறினர்.
இதனால் அமெரிக்க பெண் வாக்காளர்களிடமும், குடியரசு கட்சியினரிடமும் டிரம்ப் செல்வாக்கு அதிரடியாக சரிந்தது. இந்த நிலையில் மீண்டும் அதாவது 11-வது பெண் பாலியல் புகார் கூறியுள்ளார். அவரது பெயர் ஜெசிகா டிரேக் (42). இவர் ஆபாசபட நடிகை ஆகவும், ‘பாலியல்’ கல்வி கற்று தருபவராகவும் இருக்கிறார். இவர் வக்கீல் குளோரியா ஆல்ரெட்டுடன் வந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு லேக்தாகோ பகுதியில் நடந்த கோல்ப் விளையாட்டு போட்டி நடந்த இடத்துக்கு சென்று இருந்தேன். அங்கு தற்போது குடியரசு கட்சி வேட்பாளராக இருக்கும் டொனால்டு டிரம்பை சந்தித்தேன். அப்போது அவர் அனுமதியின்றி என்னிடம் அத்து மீறி நடந்து கொண்டார். மேலும் 2 பெண்களை அவர்கள் எதிர்பாராத நேரத்தில் முத்தமிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அதன்பின் ஓட்டல் அறைக்கு சென்ற எனக்கு அவரது உதவியாளர் ஒருவரிடம் இருந்து போன் வந்தது.
அவரது (டிரம்பின்) விமானத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும், அவர் அளிக்கும் விருந்தில் கலந்து கொண்டு அவருடன் இரவில் அறையில் தங்க 10 ஆயிரம் அமெரிக்க டாலர் (ரூ-.6 லட்சத்து 7 ஆயிரம்) தருவதாகவும் தெரிவித்தார். அதற்கு நான் சம்மதிக்கவில்லை” என்று அறிக்கையில் கூறியுள்ளார். மேலும் டொனால்டு டிரம்புடன் எடுத்த போட்டோவையும் அவர் வெளியிட்டார். ஆனால் இக்குற்றச்சாட்டை டிரம்பின் பிரசார குழு மறுத்துள்ளது.
இந்த கட்டுக்கதை முற்றிலும் பொய் மற்றும் கொடூரமானது. ஜெசிகா வெளியிட்டுள்ள போட்டோவானது டிரம்ப் ஆயிரக்கணக்கானவர்களுடன் எடுத்துக் கொண்டவைகளுள் ஒன்று. டிரம்ப்புக்கு இவரை யாரென்றே தெரியாது. இவரை தனக்கு நினைவில்லை என டிரம்ப் கூறுகிறார்.
மேலும் அவரைப் பற்றிதான் அறிந்து கொள்ள பெரிய அளவில் விருப்பம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். தனது எதிரி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன் டிரம்பின் செல்வாக்கை குறைக்க எடுத்த மற்றொரு முயற்சியாகவே இதை கருதுகிறோம் என தெரிவித்துள்ளனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.