October 20, 2016
பிரபல இதயசிகிச்சை நிபுணர் வீட்டின் பூட்டை உடைத்து, 70 பவுன் நகை, பணம் கொள்ளை!
சென்னையில் பிரபல இதயசிகிச்சை நிபுணர் வீட்டின் பூட்டை உடைத்து, பட்டபகலில் 70 பவுன் நகை உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோபாலபுரம் பகுதியில் 3 அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வரும் பிரபல இதய மருத்துவ நிபுணர் சுந்தர், இன்று மதியம் வீட்டை பூட்டி விட்டு தனது மகளுடன் வெளியில் சென்றுள்ளார்.
பின்னர் அவர் வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 70 பவுன் தங்க நகை, மற்றும் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வைரம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இது குறித்து ராயப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிக்க பகுதியில் பட்டபகலில் நிகழ்ந்த இக்கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல இதயசிகிச்சை நிபுணர் வீட்டின் பூட்டை உடைத்து, 70 பவுன் நகை, பணம் கொள்ளை!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 20, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 20, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.