Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 19, 2016

​மதபோதகரின் வீட்டில் 70 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தீடீர் திருப்பம்!



கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே பூவான்கோடு பகுதியில் மதபோதகரின் வீட்டில் 70 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், அவரது மகன் ரிஜோ சாமுவேலை போலீசார் கைது செய்தனர்.
பூவான்கோடு பகுதியை சேர்ந்த சி.எஸ்.ஐ. மதபோதகர் ரிங்கிள் ஜெயக்குமார். இருதினங்களுக்கு முன்பு, அவரது வீட்டின் பின்புற கதவை உடைத்து, பீரோவில் இருந்த 70 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன.
இது தொடர்பாக திருவட்டார் காவல் நிலையத்தில் ரிங்கிள் ஜெயக்குமார் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் மதபோதகரின் மகன் ரிஜோ சாமுவேல் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நகையை திருடியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொந்த வீட்டிலேயே கொள்ளையடித்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.