Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 17, 2016

இந்தியாவில் 70 லட்சம் பேர் வேலை இழக்க என்ன காரணம். அதிர்ச்சி தகவல்



கடந்த நான்கு ஆண்டுகளில் தினந்தோறும் 550 பேர் வேலையிழந்துள்ளனர்; இதேநிலை நீடித்தால், வரும் 2050-ஆம் ஆண்டுக்குள், 70 லட்சம் பேர் வேலையிழப்பார்கள்'' என்று தில்லியைச் சேர்ந்த "பிரஹார்' என்ற தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது.
விவசாயிகள், சிறு வியாபாரிகள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் இதுவரை இல்லாத அளவில் வாழ்வாதார அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அந்த அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் 50 சதவீத வேலைவாய்ப்புகளை விவசாயத் துறையும், 40 சதவீத வேலைவாய்ப்புகளை சிறு,குறு,நடுத்தர தொழில்துறையும் அளித்து வருகின்றன. இந்தத் துறைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளே வேலையிழப்புக்கு முக்கியக் காரணமாகும். மேலும், இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறைந்துவருவதும் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.
நாட்டில் அமைப்பு சார் நிறுவனங்கள், 3 கோடி பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன. ஆனால், அமைப்பு சாரா நிறுவனங்கள், சுமார் 44 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன. "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின்கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1,500 கோடியை முதலீடு செய்வதாக பன்னாட்டு நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன.
ஆனால், அந்த முதலீடுகளால் 60 லட்சம் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு அளிக்க முடியும். எனவே, நாட்டில் 99 சதவீத மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் விவசாயம், அமைப்புசாரா தொழில்கள், சிறு-குறு-நடுத்தர தொழில் துறைகள் ஆகியவற்றை இந்திய அரசு முறைப்படுத்தி பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.