Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 13, 2016

ஓடும் பேருந்தில் ஆட்டோ ஓட்டுநர் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி விசாரிக்க 5 தனிப்படைகள் அமைப்பு!



விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, ஓடும் பேருந்தில் பயணம் செய்த ஆட்டோ ஓட்டுநர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 2 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவில்பட்டி வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கருப்பசாமி. இவர், நாகர்கோவிலில் இருந்து சாத்தூர் வழியாக கோவை செல்லும் பேருந்தில் இன்று காலை சென்றுக் கொண்டிருந்தார்.

சாத்தூர் அருகே படந்தால் சோதனைச்சாவடி நிறுத்தத்தில் பேருந்து நின்றபோது, மர்மநபர்கள் இருவர், கருப்பசாமியை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தப்பியோடினர். இதில் ரத்த வெள்ளத்தில் கருப்பசாமி பலியானார்.

தகவல் அறிந்த விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜராஜன், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். கைரேகை நிபுணர்களின் உதவியுடன், போலீசார் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

கடந்த ஜூலை மாதம் 3ம் தேதி இரவு கோவில்பட்டியைச் சேர்ந்த அப்துல்லா என்ற கல்லூரி மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், கருப்பசாமியின் சகோதரர்கள் இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், கருப்பசாமி துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதால், முன்விரோதம் காரணமாக இந்த கொடூரம் நடந்திருக்கலாம் என கருப்பசாமி குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் தென்மாநில டிஐஜி அனந்தகுமார் சோமானியா, தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அஸ்வீன் மற்றும் விருதுநகர் மாவட்ட எஸ்பி ராஜராஜன் உள்ளிட்ட போலீசார் ஆய்வு செய்தனர். இக்கொலையில் இப்ராகிம் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதால், குற்றவாளிகளை பிடிக்க  2 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.